twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரிலீசானதும் முதல இத தான் செய்வேன்... அதிகாரியிடம் சத்தியம் செய்த ஆர்யான்

    |

    மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் 23 வயதாகும் மூத்த மகன் ஆர்யான் கான், போதைப் பொருள் வழக்கில் அக்டோபர் 2 ம் தேதி கைது செய்யப்பட்டார். சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தியதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆர்யான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

     விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அரங்கம் முழுவதும் 4 நாட்கள் செம்ம கலக்ஷன்....அரண்மனை 3 விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அரங்கம் முழுவதும் 4 நாட்கள் செம்ம கலக்ஷன்....அரண்மனை 3

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யானை வெளியில் எடுக்க ஷாருக்கான் தரப்பில் பல விதங்களில் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் ஆர்யானுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும், ஆர்யானின் வாட்ஸ்ஆப் சேட் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதால் அவருக்கு ஜாமின் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நான்கு முறை ஜாமின் மறுப்பு

    நான்கு முறை ஜாமின் மறுப்பு

    இதனால் ஆர்யானுக்கு ஜாமின் வழங்க இதுவரை நான்கு முறை மும்பை செசன்ஸ் கோர்ட் மறுத்து விட்டது. அக்டோபர் 20 ம் தேதி வரை ஆர்யானுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மீண்டும் ஆர்யானின் ஜாமின் மனு விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது. ஆர்யான் மீது தவறான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுவதாக ஷாருக்கான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    கண் கலங்கிய ஆர்யான்

    கண் கலங்கிய ஆர்யான்

    மும்பை ஆர்தூர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான், 10 நிமிடங்கள் அவரின் பெற்றோரிடம் வீடியோ காலில் பேச சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. வீடியோ காலின் போது ஆர்யான், தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரியை பார்த்து கண்கலங்கி, அழுதுள்ளார். ஆர்யான் கானுக்கு சிறை கேன்டீனில் தேவையானவற்றை வாங்கி சாப்பிட ரூ.4500 மணிஆர்டரும் அனுப்பப்பட்டுள்ளது.

    இனி நல்ல பிள்ளையாக இருப்பேன்

    இனி நல்ல பிள்ளையாக இருப்பேன்

    சிறையில் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக்கும் ஆர்யான், இது தனது வாழ்க்கையின் மிக மோசமான காலம் என புலம்பி வருகிறாராம். இந்நிலையில் சமீபத்தில் ஆர்யானுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஜோனல் டைரக்டர் சமீர் வான்கடே முன்னிலையில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது இனி தான் நல்ல விஷயங்களை மட்டுமே செய்ய உள்ளதாக ஆர்யான் வாக்குறுதி அளித்துள்ளார்.

    ஏழைகளுக்காக உழைப்பேன்

    ஏழைகளுக்காக உழைப்பேன்

    தான் சிறையில் இருந்து ரிலீசான பிறகு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஏழைகளின் நல்வாழ்விற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் உழைக்க போவதாக ஆர்யான் கூறி உள்ளார். நீங்கள் பெருமைப்படும் வகையில் நான் நிச்சயம் நடந்து கொள்வேன். பப்ளிசிட்டி தேடிக் கொள்வதற்காக தவறாக எதையும் செய்ய மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம்.

    சாப்பிட அடம்பிடிக்கும் ஆர்யான்

    சாப்பிட அடம்பிடிக்கும் ஆர்யான்

    மும்பை சிறையில் இருக்கும் ஆர்யானின் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்களாம். ஆர்யான் சிறை உணவுகளை சாப்பிட மறுத்து வருவதால் அவரின் உடல்நிலை குறித்து அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனராம். கொரோனா நெகடிவ் என உறுதி செய்யப்பட்டதால் ஆர்யான் மற்றும் போதை வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் சாதாரண கைதிகள் இருக்கும் அறைக்கே மாற்றப்பட்டுள்ளனராம்.

    English summary
    Aryan has been given counseling in the presence of the Zonal Director of the Narcotics Division, Samir Wankade. Aryan promises that he will only do good things then.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X