For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாம்பே ஞானம் இயக்கத்தில் ஆரியன்ஷாம் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடிக்கும் படம்

  |

  சென்னை : திருப்பதி வெங்கடாஜலபதியின் புராண வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. சீனிவாசப்பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

  இந்தப் படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆகவும் மற்றும் ஸ்ரீனிவாசன் , மகா விஷ்ணு ஆகிய வேடங்களில் ஆரியன் ஷாம் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக முழுமையாக விரதம் இருந்து இந்த திருப்பதி பாலாஜி வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

  முடிவுக்கு வந்தது வடிவேலு பஞ்சாயத்து; விரைவில் அதிரடியை ஆரம்பிக்கும் வைகைப் புயல்!முடிவுக்கு வந்தது வடிவேலு பஞ்சாயத்து; விரைவில் அதிரடியை ஆரம்பிக்கும் வைகைப் புயல்!

  தெலுங்கில் அதிகமாக கிருஷ்ணர் வேடத்தை ஏற்று நடித்து புகழ்பெற்றவர் என்.டி. ராமாராவ், அவருக்குப் பிறகு அந்த வேடத்தை முழுமையாக ஏற்று நடித்திருக்கும் இளம் நடிகர் ஆர்யன் ஷாம். இதில் மகாலட்சுமியாக அதிதியும் ஸ்ரீ பத்மாவதி தேவியாக சந்தியா ஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள்.

  தலைச்சிறந்த மகான்கள்

  தலைச்சிறந்த மகான்கள்

  இந்தப்படத்தின் ஒளிப்பதிவை எஸ். ஆனந்த்பாபு கவனித்திருக்கிறார். இசையை திவாகர் சுப்பிரமணியம் பக்தி ஊட்டும் வகையில் அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற இந்தியாவின் தலைச்சிறந்த மகான் பற்றி பல நாடகங்களை நடத்திய பாலசுப்பிரமணியம் (பம்பாய் ஞானம்) இயக்கியிருக்கிறார்.

  சிகாகோ பயணத்திற்கு

  சிகாகோ பயணத்திற்கு

  விரைவில் வெளிவரவிருக்கும் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்யன் ஷாம் நடித்து வருகிறார். இவர் இந்தியன் வங்கியின் நிறுவனர் மறைந்த கிருஷ்ணசாமியின் கொள்ளுப் பேரன் ஆவார். கிருஷ்ணசாமி என்பவர் தான் சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ பயணத்திற்கு முழு நிதி உதவியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அங்கு இந்து மதத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினார்.

  ஒன்றாக கூடி

  ஒன்றாக கூடி

  வரலாற்று சிறப்புமிக்க படங்களில் நடிப்பது மிகப்பெரிய பாக்கியமாகும் . அதுவும் குறிப்பாக வணங்கும் தெய்வங்களின் உருவத்தை ஏற்று நடிப்பது திறமை மட்டும் இருந்தால் போதாது , அதையும் தாண்டி கடவுளின் ஆசீர்வாதம், தெய்வத்தின் அனுகிரகம் போன்ற விஷயங்கள் ஒன்றாக கூடி ஒரு தெய்வ சங்கல்பமாக மாறினால் மட்டும்தான் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் ஒரு கதாநாயகனுக்கு அல்லது ஒரு கதாநாயகிக்கு கிட்டும்.

  பதிய வைக்கும்

  பதிய வைக்கும்

  அந்த வகையில் எத்தனையோ நடிகர்கள் விதவிதமான புராணப் படங்களில் இதிகாச திரைப்படங்களில் சிவன், பார்வதி, பெருமாள் ,விநாயகர் ,முருகன், ஐயப்பன் ,கிருஷ்ணன், லட்சுமி ,அம்மன், என்று அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பலதெய்வ ரூபங்களை மக்களின் மனதில் ஆழப் பதிய வைக்கும் வரை அற்புதமாக ஏற்று நடித்து தெய்வ கடாக்ஷத்துடன் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

  காட்சி ரீதியாக

  காட்சி ரீதியாக

  குறிப்பாக தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற்றவை . தெய்வத்தின் வழிபாடு தெய்வத்தின் அருள் தெய்வ தரிசனம் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் சூட்டிங் செய்யும் பொழுது அங்கு பணிபுரியும் ஒட்டு மொத்த குழுவுவுமே பக்தியுடன் செயல்பட்டு ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து நேர்த்தியுடன் பயபக்தியுடன் காட்சிகளை அமைப்பர் . பல முன்னணி இயக்குனர்கள் பலவிதமான தெய்வங்களின் கதைகளை காட்சி ரீதியாக பதிவு செய்து வாழ்வியலை மிகவும் எளிதாக இறைவழிபாடுடன் கனெக்ட் செய்ய நினைத்ததால் , பக்தி படங்கள் மூலம் இறைசக்தியை வலியுறுத்தி சினிமாவில் வெற்றி பெற்றுள்ளனர் .

  புரியாத புதிர்களுக்கு

  புரியாத புதிர்களுக்கு

  தெய்வங்களாக காட்சி தரும் நடிகர்கள் உண்மையிலேயே ஒருவிதமான தியாகத்தை செய்து நிதானத்தை கடைபிடித்து நேர்மையாக நடந்து கொண்டால்தான் அவர்களது கண்களில் ஒருவிதமான ஒளி கிடைக்கும். முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும் . அப்படிப்பட்ட முகத்தை தான் கேமராமேன் விதவிதமான ஷார்ட்ஸ் எடுக்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மக்களை மகிழ்விக்க பல யுத்திகளை கையாண்டு இறைவன் என்றால் என்ன இறைவனுடைய உலகம் எப்படிப்பட்டது இறைவன் எதை எதிர்பார்க்கிறான் போன்ற பல புரியாத புதிர்களுக்கு தத்ரூபமாக காட்சிகளை பதிவு செய்து உணர்ச்சிபூர்வமான வசனங்களை வரிசைப்படுத்தி சினிமா ரசிகனுக்கும், கடவுள் பக்தனுக்கும் ஒரு பரவச நிலையை ஏற்படுத்தி வெற்றி பெறுகிறார்கள் பிரம்மாண்ட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.

  பிரீ பிளானிங்

  பிரீ பிளானிங்

  பாம்பே ஞானம் ,மேடை நாடகங்களில் குறிப்பாக தெய்வங்களின் வரலாற்றை சொல்லும் மேடை நாடகங்களில் அற்புதமாக செட் அமைத்து மிகவும் நேர்த்தியாக பிரீ பிளானிங் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு இயக்குனர் ஆவார் . நாடக உலகில் பாம்பே சாணக்யா வித்தியாசமான கதைகளுடன் ஒரு சிறந்த நாடக ஆசிரியராக இயக்குனராக அவ்வையார் மற்றும் மகரிஷி போன்ற நாடகங்களை இயக்கியுள்ளார். பாம்பே சானக்கியாவின் நாடகங்கள் ஒரு ஸ்டைல் பாம்பே ஞானத்தின் நாடகங்கள் ஒரு தனி ஸ்டைல் , இருவருமே நாடக உலகில் பல சாதனைகள் செய்து உள்ளனர்.

  பரவசப்படுத்தும்

  பரவசப்படுத்தும்

  ஏ வீ எம் புரோடக்சன்ஸ் பற்றி தமிழ் சினிமாவில் இருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை . அப்படிப்பட்ட ஒரு முன்னோடியான கம்பெனி நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு கதையை தேர்ந்தெடுத்து பாம்பே ஞானம் போன்ற ஒரு இயக்குனரை பயன்படுத்தி மக்களின் மனதில் இருக்கும் பக்தியை பரவசப்படுத்தும் இந்த முயற்சியை எடுத்துள்ளார்கள் .

  எத்தனை வந்தது

  எத்தனை வந்தது

  தமிழ் சினிமாவில் இருக்கும் பல சீனியர் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் இந்த முயற்சியைப் பாராட்டி ஏவிஎம் நிறுவனத்தையும் மற்றும் அந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் எத்தனையோ விதமான காதல் படங்கள் காமெடி படங்கள் அட்வென்ச்சர் படங்கள் என்று வந்து கொண்டே இருந்தாலும் பக்தி படங்கள் எத்தனை வந்தது என்று யோசித்துப் பார்த்தால் மிக மிக குறைவே . ஆதலால் ஆரியன்ஷாம் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடிக்கும் இந்த படம் மிக பெரிய வெற்றியடைய பலரும் வாழ்த்தி வருகின்றனர் .

  English summary
  The mythological history of Tirupati Venkatajalapathy has been made into a film in Tamil and Telugu. The film also stars Aryan Sham as Tirupati Venkatajalapathy, Srinivasan and Maha Vishnu. Balasubramaniam (Bombay Gnanam) has directed many plays about the great saint of India. This bilingual movie is produced by AVM productions.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X