Mr X Day 2 collection: வசூலை பெற தள்ளாடும் “மிஸ்டர் எக்ஸ்“.. இரண்டாம் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்!
சென்னை: ஆர்யா , கௌதம் கார்த்தி நடிப்பில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17)ந் தேதி வெளியான படம் மிஸ்டர் எக்ஸ். மனு ஆனந்த இயக்கியிருக்கும் இப்படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், ரைசா விலசன், அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படத்தின் இரண்டாம் நாள் வசூலை பார்க்கலாம்.
மிஸ்டர் எக்ஸ் கதை: அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியா மற்றும் அமெரிக்கா சேர்ந்து நந்தாதேவி என்ற இடத்தில் ஒரு நியூக்ளியர் டெஸ்ட் செய்வதற்காக செல்கின்றனர். ஆனால், அங்கு நடந்த பனிச்சரிவில் அந்த நியூக்ளியர் டிவைஸ் தொலைந்துவிடுகிறது. இந்த டிவைஸ் வருடம் கழித்து ரஷ்யாவிடம் கிடைக்க, ரஷ்யா, பாகிஸ்தானுடன் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறது. இதை தெரிந்து கொண்ட இந்தியா, முன்னணி ரா ஏஜண்டான சரத்குமார் டிவைஸை கைப்பற்றிவிடுகிறார். ஆனால், அவர் ரஷ்யாவிடம் சிக்கி கொள்கிறார். இவரை காப்பாற்ற இந்தியாவில் இருக்கும் ரா ஏஜண்டான ஆர்யா மற்றும் அவரின் டீம் ரஷ்யா செல்கிறது. இந்த டீம் சரத்குமாரை காப்பாற்றினார்களா? நியூக்ளியர் டிவைஸ் கிடைத்ததா? இந்த மிஷனை வெற்றி பெற்றதா என்பது தான் படத்தின் மீதி கதை.

சொதப்பல்: "மிஸ்டர் எக்ஸ்" திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கதையாக இருந்தாலும், பல படத்தில் பார்த்த காட்சிகளே இருப்பதால் பல இடத்தில் அடுத்து என்ன காட்சி என யூகிக்க வைத்தது. இயக்குநர் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனால், ஆர்யா நல்ல நடிப்பை கொடுத்து இருக்கிறார். அதே போல கௌதம் கார்த்திக் முதன் முறையாக நெகட்டிவை ரோலில் நடித்து அசத்தி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்பு அதிகரிக்கும்.
2ம் நாள் வசூல்: கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் முதல் நாளில் ரூ.65 லட்சத்தை மட்டுமே வசூல் செய்தது. இரண்டாம் நாளான நேற்று சனிக்கிழமை என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் படத்தின் வசூல் சற்று அதிகரித்து ரூ.75 லட்சத்தை வசூலித்துள்ளது. படம் இந்திய அளவில் ரூ.1.36 கோடியை வசூலித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications