2021ல் அதிக வசூலை பெற்ற திரைப்படங்கள்... முதலிடத்தை பிடித்த தளபதியின் மாஸ்டர்!

சென்னை : நடிகர் விஜய் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படம் சிறப்பான வசூலை பெற்றது.

இந்தப் படம் தற்போது 2021ல் அதிக வசூலை பெற்ற படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான சூரியவன்ஷி உள்ளது.

இறுதிக்கட்டத்தில் 2021

இறுதிக்கட்டத்தில் 2021

2021ம் ஆண்டு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பையடுத்து திரைத்துறை திக்குமுக்காடியது. தற்போது இயல்புநிலை திரும்பியுள்ள போதிலும் ஓமிக்ரான் வைரஸ் தலைத்தூக்கியுள்ளது.

திறக்கப்பட்ட திரையரங்குகள்

திறக்கப்பட்ட திரையரங்குகள்

ஆயினும் கொரோனா மட்டுபட்டதையடுத்து கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்பட்டு முதலில் 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 அதிக வசூல் பெற்ற மாஸ்டர் படம்

அதிக வசூல் பெற்ற மாஸ்டர் படம்

இந்நிலையில் இந்த ஆண்டில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் உலக அளவில் 250 முதல் 300 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 217 கோடி ரூபாய் வசூல்மழை பொழிந்துள்ளது. இந்தப் படம் புக் மை ஷோ பட்டியலில் அதிக வசூலை வாரிக்குவித்த படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கம்

கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் விஜய், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சேர்கிறார். அங்கு சிறுவர்களை சட்டவிரோதமாக பயன்படுத்தும் கேங்ஸ்டர் ஒருவரின் செயலை கண்டுபிடித்து அதை முறியடிக்கிறார். இவ்வாறு செல்லும் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

2வது இடத்தில் சூர்யவன்ஷி

2வது இடத்தில் சூர்யவன்ஷி

அடுத்ததாக இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது அக்ஷய் குமார், கத்ரினா கையிஃப், ரன்வீர் சிங் நடிப்பில் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான சூர்யவன்ஷி படம் உள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக செயல்புரிய காவல் அதிகாரியாக அக்ஷய் இந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் உலகளவில் 293.23 கோடி வசூல் செய்துள்ளது.

3வது இடத்தில் அண்ணாத்த

3வது இடத்தில் அண்ணாத்த

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள படம் சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த. கடந்த தீபாவளியையொட்டி வெளியான இந்தப்படத்தில் காளையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். கொல்கத்தாவில் வசிக்கும் தனது தங்கையின் பிரச்சினைகளையும் அதற்கு காரணமானவர்களையும் துவம்சம் செய்யும் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார்.

ரூ. 239.55 கோடி வசூல்

ரூ. 239.55 கோடி வசூல்

இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சிறுத்தை சிவா. ரஜினியுடன் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் படம் உலகளவில் ஈட்டியுள்ள வசூல் 239.55 கோடிகள். தற்போது புக் மை ஷோ பட்டியலில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் அண்ணாத்த உள்ளது.

4வது இடத்தில் வக்கீல் சாப்

4வது இடத்தில் வக்கீல் சாப்

இந்தியில் அமிதாப் நடிப்பில் பிங்க் மற்றும் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என வெளியான படத்தில் தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் நிவேதா தாமஸ், அஞ்சலி, அனன்யா நாகாலியா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

பிங்க் படத்தின் ரீமேக்

பிங்க் படத்தின் ரீமேக்

வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் உலகளவில் 137.65 கோடி ரூபாய் வசூலை ஈட்டி 4வது இடத்தில் உள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் 3 பெண்களுக்காக வாதாடி வெற்றி பெறும் கேரக்டரில் பவன் கல்யாண் நடித்திருந்தார்.

5வது இடத்தில் டாக்டர்

5வது இடத்தில் டாக்டர்

இந்தப் பட்டியலில் இறுதி மற்றும் 5வது இடத்தில் உள்ளது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம். இந்தப் படம் மனித கடத்தலுக்கு எதிராக ராணுவ மருத்துவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கதைக்களமாக கொண்டு வெளியானது. படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

5 இடங்களில் 3 தமிழ் படங்கள்

5 இடங்களில் 3 தமிழ் படங்கள்

புக் மை ஷோ வெளியிட்டுள்ள 5 படங்களை கொண்ட இந்த பட்டியலில் மூன்று தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. விஜய், ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் மூவருமே தமிழ் படவுலகின் முக்கியமான நாயகர்களாக உள்ள நிலையில், இவர்களது படங்கள் இந்த ஆண்டில் வசூல்மழையை பொழிந்துள்ளன.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

இந்த ஆண்டில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திரைத்துறை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானது. இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட இந்தப் படங்கள் வசூல் மழையை பொழிந்துள்ளன. சினிமாவிற்கு எப்போதும், எந்த காலத்திலும் ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பதை இது உணர்த்துகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X