புரட்டாசி எண்ட்ஸ்.. கார்த்தியின் கைதி பட பிரியாணி காட்சியுடன் கொண்டாடிய ரசிகர்கள்!

சென்னை : நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானது கைதி படம்.

இந்தப் படத்தில் வழக்கமான ஹீரோயிசம் எதுவுமில்லாமல், அழுக்கு லுங்கியோடு நடித்திருப்பார் கார்த்தி. அவருக்கு பெஸ்ட்டாக அமைந்திருந்தது இந்தப் படம்.

இந்தப் படத்தில் ஒரு கட்டத்தில் பிரியாணியை மிகவும் ஆசையோடு சாப்பிடுவார் கார்த்தி. பல ஆண்டுகள் சிறையில் இருந்து வெளியில் வரும் ஒரு கைதிக்கு அந்த பிரியாணி எத்தகைய இன்பத்தை கொடுத்திருக்கும் என்பதை அவர் மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

நடிகர் கார்த்தியின் கைதி

நடிகர் கார்த்தியின் கைதி

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியானது கைதி படம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த நிலையில், படம் கார்த்திக்கு சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. வழக்கமான ஹீரோயிசங்கள் இல்லாமல் சிறையிலிருந்து ரிலீசாகி வெளியில் வரும் கைதியை சிறப்பாக பிரதிபலித்திருந்தார் கார்த்தி.

காவலர்களை காப்பாற்றும் கைதி

காவலர்களை காப்பாற்றும் கைதி

படத்தில் நாயகி இல்லாமல், பாடல்கள் இல்லாமல் காமெடி இல்லாமல் ரசிகர்களை கட்டிப் போட முடியும் என்பதை நிரூபித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். 900 கிலோ போதைப்பொருளை பிடிக்கும் போலீஸ் அதிகாரி நரேன், ஐஜி வீட்டில் நடைபெறும் பார்ட்டி, போதைப் பொருளை கொடுத்து அதிகாரிகளை மயக்கமடைய செய்யும் வில்லன் கும்பல், அவர்களை காப்பாற்ற களமிறங்கும் கைதி என இந்தப் படம் சிறப்பான பல கதைக்களங்களை விவரித்துக் கொண்டே போகும்.

நரேனுக்கு கைகொடுக்கும் கார்த்தி

நரேனுக்கு கைகொடுக்கும் கார்த்தி

போதை கும்பலின் முயற்சியை தகர்க்கும் நரேனுக்கு கைக்கொடுக்கிறார் நாயகன் கார்த்தி. ஆயுள் தண்டனையை அனுபவித்துவிட்டு அனாதை ஆசிரமத்தில் இருக்கும் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக ஆசையுடன் செல்லும் வழியில் அவருக்கு இந்த விஷயம் குறுக்கிடும். அப்போது உதவிக்கு முன்பாக பிரியாணியை ஒரு வெட்டு வெட்டுவார் கார்த்தி.

பிரியாணி சாப்பிடும் கைதி

பிரியாணி சாப்பிடும் கைதி

நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்து வெளியில் வரும் ஒரு கைதிக்கு கிடைக்கும் இந்த பிரியாணி மற்றும் பக்கெட்டில் எடுத்துச் சென்று அதை வைத்து சாப்பிடும் கார்த்தி, பிரியாணி பிரியர்களை வெகுவாக ஈர்த்திருந்தார். அவர் பிரியாணி சாப்பிடுவதை பார்த்துவிட்டு தனக்கும் பிரியாணி சாப்பிடும் ஆசை வந்துவிட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர்.

வெளுத்து கட்டும் கார்த்தி

வெளுத்து கட்டும் கார்த்தி

தட்டு இல்லாத நிலையில், பிரியாணியை மூடும் தட்டிலேயே போட்டு சாப்பிடும் கார்த்தி முதலில் ஒரு கவளத்தை எடுத்து அதை ஆசையுடன் முகர்ந்து பார்ப்பார். அதையடுத்து கறி, எலும்பு என வெளுத்து வாங்குவார். அந்தக் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது.

முடிந்தது புரட்டாசி

முடிந்தது புரட்டாசி

இதனிடையே கடந்த ஒரு மாத காலமாக புரட்டாசியை ஒட்டி பலர் நான்-வெஜ்ஜை ஒதுக்கி வைத்த நிலை காணப்பட்டது. இதனிடையே இன்றைய தினம் புரட்டாசி முடிந்து ஐப்பசி துவங்கியுள்ள நிலையில், அனைவரும் கார்த்தியின் இந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X