ஒரு பெண்ணையும் விட்டு வைக்கிறது இல்லை.. ஜனனி முதுகில் அசல் கோலார் போடும் கோலத்தை பாருங்க!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து அசல் கோலார் கோளாறு பண்ணிக் கொண்டு இருக்கிறார் என ஒரு கூட்டமும் அவர் ஜாலியாகத்தான் விளையாடுகிறார் என்று சில ரசிகர்களும் தொடர்ந்து வாதம் செய்து வருகின்றனர்.

ஜோர்த்தால பாடல் மூலம் பிரபலமானவர் அசல் கோலார். இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக வந்த அவரிடம் பல கானா பாடல்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால், அவரிடம் இருந்து ஏகப்பட்ட லீலைகள் தான் தினந்தோறும் வந்து கொண்டே இருப்பதாக சோஷியல் மீடியாவில் ட்ரோல்கள் பறக்கின்றன.

தடவுறதே வேலை

தடவுறதே வேலை

பெண் போட்டியாளர்களின் கைகளையும், கால் முட்டி பகுதிகளையும் முதுகு பகுதியையும் தடவுறதே வேலையாக கொண்டிருக்கிறார் அசல் கோலார் என ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பருத்திவீரன் சரவணன் பெண் போட்டியாளரிடம் அத்துமீறியதாக கூறிய வெளியே அனுப்பிய பிக் பாஸ் இப்போ வேடிக்கை பார்க்கிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பெண்களிடம் உரசி

பெண்களிடம் உரசி

பெண் போட்டியாளர்கள் பக்கத்திலேயே உரசிக் கொண்டும் அவர்களின் அங்கங்களை அனுமதியில்லாமல் தொட்டுக் கொண்டு இருக்கும் வேலையை அசல் கோலார் தெரிந்து தான் பண்ணுகிறார் என்றும், எப்படியாவது யாரையாவது கரெக்ட் செய்து விட்டு வெளியே போக வேண்டும் என்கிற யுக்தியுடன் தான் அவர் அலைந்து கொண்டிருக்கிறார் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

ஜனனி முதுகில் கோலம்

ஜனனி முதுகில் கோலம்

தினமும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி வருகிறார் அசல் கோலார் என குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வரும் நிலையில், லேட்டஸ்ட்டாக ஜனனியின் முதுகில் அசல் கோலார் கோலம் போட்டுள்ளார் என போட்டோவை ஷேர் செய்து பிக் பாஸ் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

தனலட்சுமி தான் கரெக்ட்

தனலட்சுமி தான் கரெக்ட்

அசல் கோலாரை அண்ணன் சொன்னதற்காக பிரச்சனை கிளம்பிய நிலையில், லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தனலட்சுமி மாதிரியான ஆட்கள் தான் இவனுக்கு சரி என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு அசல் கோலாரை வெளியே அனுப்ப வேண்டும் என்றும் கமல் சார் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

பிக் பாஸ் வீடுன்னு பார்க்கிறேன்

பிக் பாஸ் வீடுன்னு பார்க்கிறேன்

அசல் கோலாரை வைத்து ஏகப்பட்ட மீம்களும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. குயின்ஸியும் அசல் கோலாரை முறைத்த காட்சியை பதிவிட்டு, சச்சின் படத்தில் வடிவேலை நோக்கி செருப்பை காட்டும் சீனை போட்டு பிக் பாஸ் வீடுன்னு பார்க்கிறேன் என பங்கம் பண்ணி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X