யார்ரா அந்த பையன் மேல புகாரா.. கஞ்சா வைச்சிருக்கியா.. போலீஸ் நிலையத்தில் அசல் கோலார்
சென்னை: ஏய் ஜொர்தாலேயே உர்ட்டாதே... தொர்ட்டா தூக்கினு தொரத்தாத பாடல் மூலம் பிரபலமானவர் ராப் பாடகர் அசல் கோலார். யார்டா அந்த பையன்.. என்னை சண்டைக்கு கூப்பிட்டா என்ற பாடல் மூலம் உலகம் சுற்றும் வாலிபனாக மாறிவிட்டார். இந்நிலையில், நேற்றிரவு திடீரென போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த அவர் தனது மலேசிய நண்பர்களை போலீஸ் மிரட்டுவதாக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிச்சு துன்புறுத்துவது முறையா என்றும் அவர் கேட்டுள்ளார்.
பிரபல ராப் பாடகரான அசல் கோலாரின் ஒரிஜினல் பெயர் வசந்தகுமார். திரைத்துறையில் அசல் கோலார் என்றே அறியப்படுகிறார். கானா, ராப் பாடல்களை பாடி மக்களை கவர்ந்துள்ளார். இவர் தனியாக வைத்திருக்கும் யூடியூப் சேனலில் கானா பாடல்களை பதிவேற்றி பிரபலம் அடைந்தார். அதன் பின்பு லியோ படத்தில் நா ரெடி தான் பாடலில் ராப் பாடி அசத்தியிருந்தார். அதன் பிறகு யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. இன்ஸ்டா பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்களை திறந்தாலே இந்த பாடல்கள் தான் அதிகம் தேடி பார்க்க தொடங்கினர்.

நல்லவனாக இருப்பது: பின்னர், என்ன சண்டைக்குக் கூப்டா.. உள்ளிட்ட பாடல்கள் மூலம் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் தொகுப்பாளர் திவ்யதர்ஷினியின் கேள்விக்கு பல்வேறு பதில்களை தந்த அசல் கோலார், எல்லோரையும் வியக்க வைக்கும் வகையில் ஒரு பதிலை தந்தார். அந்த வீடியோ அசல் கோலார் யார் என்பதை உறுதிப்படுத்தியது. காதல் பற்றி டிடி கேள்வி கேட்டதும், ரொம்ப நிதானமாக யோசித்து பேசிய கோலார், காதலிக்கும் பெண் அப்படி இருக்கனும் இப்படி இருக்கனும் எதிர்பார்க்காம நாம நல்லவனா இருக்கிறது தான் காதல் நான் நினைக்கிறேன். அது எனக்கு லேட்டாதான் புரிந்துகொண்டேன் என தெரிவித்தார்.
புகார்: ராப் பாடல்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் சென்று வரும் அசல் கோலார், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது, தனது மலேசிய நண்பரை குடியுரிமை அதிகாரிகள் கீழ்த்தரமாக நடத்தியதாகவும், கஞ்சா வைச்சிருக்கியா என்று மிரட்டியதாகவும் புகார் தெரிவித்திருக்கிறார். அசல் கோலார் கூறியதாவது, மலேசியா சிட்டிசன் ஆன எனது நண்பர் கடந்த 2 மாதமாக இங்கு சென்னையில் தங்கி இருக்கிறார். டூரிஸ்ட் விசாவில் வந்துள்ளார்.

ஆனால் டூரிஸ்ட் விசா எக்ஸ்பைரியாகும் நிலையில், அவரது நாட்டில் இருந்து டூரிஸ்ட் விசாவை ரெனிவல் பண்ணியிருக்கார். ஆனால், டூரிஸ்ட் விசாவை எக்ஸ்டண்ட் பன்னமுடியாது என எங்களுக்கு இன்று தான் தெரியும். நானும் எனது மலேசிய நண்பரும் இதுதொடர்பாக பல அலுவலகங்களுக்கு சென்று அலைந்து திரிந்து அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறோம். நாங்கள் குடியுரிமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, மலேசிய நண்பரிடம் எங்கு தங்கியிருக்கிறாய். எந்த இடம் நண்பர்கள் யார் என கேட்டுள்ளனர். அதிகாரிகள் தேவையில்லாத கேள்விகளை கேட்டதால் வாக்குவாதம் ஆனது.
பின்னர், எனது நண்பரை தனியாக அழைத்து சென்று அவரை அடித்து துன்புறத்தி, கஞ்சா வைத்திருக்கியா என மோசமாக நடந்துகொண்டனர் என அசல் கோலார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் நாங்கள் எல்லா ஆவணங்களையும் தந்த பிறகும் எல்லாம் சரிசெய்து தருகிறோம் என்கின்றனர். மத்திய அரசின் அதிகாரிகள் ஏன் இப்படி இருக்கின்றனர் என தெரியவில்லை. தமிழ்நாடு போலீஸ் தான் எனக்கு உதவி செய்தனர். நான் ஒரு பிரபலம் என்பதால் இந்த பிரச்னையை எதிர்கொள்ள முடிந்தது. சாமானிய மக்கள் என்ன செய்வார்கள் என அசல் கோலால் பொங்கி எழுந்துள்ளார். ராப் பாடகர், கானா பாடகர்கள் என்றாலே கஞ்சா என்ற வார்த்தை ஏன் வருகிறது என நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications