அசல் கோலாருக்கு வெளியில் காதலி இருக்கிறாரா? நிவாஷினிக்கு ரூட்டுவிட்டது சும்மாவா..ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை : அசல் கோலாருக்கு வெளியில் காதலி இருப்பதாக குயின்ஸி கூறியிருப்பதை கேட்டு ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால், ஆறாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

இந்த சீசனில் முதலில் 20 போட்டியாளர்கள் உள்ளே வந்த நிலையில், மைனா நந்தினி ஒருவாரத்திற்கு பிறகு உள்ளே நுழைந்தார்.

அசல் கோலார்

அசல் கோலார்

இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே, நெட்டிசன்கள் வெச்சு செய்த போட்டியாளராக இருந்தார் அசல் கோலார்.பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவதுமாகவே இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவை வம்புக்கு இழுத்தார். குயின்ஸி, நிவாஷினி, மகாலட்சுமி, மகேஸ்வரி என ஒருவரையும் விட்டுவைக்காமல் போகிற போக்கில் தடவிவிட்டு போய் கொண்டே இருந்தார்.

குயின்ஸி சிக்கவில்லை

குயின்ஸி சிக்கவில்லை

முதலில் குயின்ஸிக்கு வலை போட்டு பார்த்தார் அசல் கோலார். ஆனால், அதில் அந்த மீன் சிக்காமல் நிவாஷினி மாட்டிக்கொண்டார். இதையடுத்து, நைசாக நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று உன்னை எனக்கு பிடிக்கும் என்று கூறி ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டில் லவ் ட்ராக்கை ஆரம்பித்தார். இதையடுத்து, நிவாஷினியை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, தடவுவதுமாகவே இருந்தார்.

வெளியேறிய அசல்

வெளியேறிய அசல்

இதனால், இணையத்தில் அவருக்கு எதிரான கருத்துக்கள் வைரலாகி, பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் இந்த சில்மிஷ பேர்வழியை ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்ற கருத்து இணையத்தில் வைரலானது. இதையடுத்து, குறைந்த வாக்குகள் பெற்றதால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அசல் கோலாரு வெளியேறினார். அசல் வீட்டை விட்டு வெளியேறியதை நினைத்து நினைத்து நிவாஷினி அழுதுக்கொண்டே இருந்தார்,என்னால்தான் அவன் வெளியில் போனான் என புலம்பிக்கொண்டே இருந்தார் நிவாஷினி.

வெளியில் காதலி

வெளியில் காதலி

இந்நிலையில், அசீமும் குயின்ஸியும் அசல் வெளியில் போனதால் நிவாஷினி அழுதுகொண்டே இருப்பது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது குயின்ஸி, அசல் விளையாட்டை சரியாக விளையாடவில்லை என்றும், நிவா பின்னாடி சுத்தியது தான் பிரச்சனை என்றும், மேலும், அசலுக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார், நிவா அவருக்கு காதலி எல்லாம் கிடையாது. அவ வெறும் friendship தான் என்று கூறியுள்ளார்.

காதலி இருக்கும் போதே இப்படியா

காதலி இருக்கும் போதே இப்படியா

இந்த வீடியோவை பார்த்து டென்ஷனான பிக் பாஸ் பார்வையாளர்கள், காதலி இருக்கும் போதே இப்படியா நிவாஷினியிடம் நடந்துகொள்ளவது ச்சீ..அப்போ நிவாஷினியை காதலிக்கவில்லையா என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். எது எப்படியோ அசல் வீட்டிற்குள் இருக்கும் போது, குறையாமல் கண்டெண்டை வாரி வாரி கொடுத்துக்கொண்டு இருந்தார். இப்போ கண்டெண்ட் மிஸ்ஸிங் என பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X