saregamapa: தேவதையாக ஜொலிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளி மகள் அசானி.. சரிகமபவில் திடீர் என்ட்ரி!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்.
28 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 5 பேர் வெளியேறிய நிலையில், தற்போது 23 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் புதிய வரவாக என்ட்ரி கொடுத்துள்ளார் இலங்கை கண்டியை சேர்ந்த அசானி கனகராஜ்.
சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் திடீரென இணைந்த அசானி: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பான வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி. 28 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 23 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ரசிகர்களை வெகவாக கவர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் புதிய மற்றும் இனிய வரவாக என்ட்ரி கொடுத்துள்ளார் இலங்கை கண்டி பகுதியை சேர்ந்த அசானி கனகராஜ்.

தேயிலை பறிக்கும் தொழிலாளியின் மகளான அசானியின் குடும்பம் இலங்கையில் உள்ள கண்டி என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். 150 வருடங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் இவர்களுக்கு பூர்வீகமாக இருந்த நிலையில், இவர்கள் இலங்கைக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு தேயிலை தோட்டத்தில் பல வருடங்களாக இவர்களது தலைமுறை கொத்தடிமைகளாக வேலை செய்து வந்துள்ளது.
தற்போதும் அசானியின் அப்பா, அம்மா, அண்ணன் என மூவர் ஒரு நாளைக்கு 200 ருபாய் சம்பளத்துக்கு தேயிலை தோட்டத்தில் தான் வேலை செய்து வருகின்றனர்.

அசானியின் மற்றொரு அண்ணன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறாராம். சினிமா, டிவி எல்லாம் பார்க்காமல் வெறும் எப்.எம் ரேடியோவில் பாட்டு கேட்டு பாட பழகி வந்துள்ளார் அசானி. அவரின் திறமையை அறிந்த குடும்பத்தினர் வீடியோ அனுப்பி சரிகமப ஆடிஷனில் பங்கேற்று தேர்வாக, சரிகமப குழுவினர் மெகா ஆடிஷனில் பங்கேற்க சென்னை வர சொல்லியுள்ளனர். ஆனால் வசதி வாய்ப்பு இல்லாத இவர்கள் சென்னைக்கு வரும் வழி தெரியாமல் தவித்துள்ளனர்.
இதையடுத்து இதுகுறித்து அந்த ஊர் மக்கள், உறவினர்கள் என எல்லாரும் சேர்ந்து எங்களால் தான் வாழ்ந்த மண்ணை மிதிக்க முடியவில்லை, நீங்களாவது போய் சாதித்துவிட்டு வாங்க என்று கையில் இருந்த பணத்தை கொடுத்து உதவியுள்ளனர். அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் பிரேம் என்ற நபர் பாஸ்போர்ட், விசா எடுக்க தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் மெகா ஆடிஷனை இவர்கள் மிஸ் செய்துள்ளனர்.

தொடர்ந்து சரிகமப குழுவை அசானியின் பெற்றோர் அணுகி, நடுவர்களிடம் இது குறித்து பேசிய போது போட்டியாளர்களை தேர்வு செய்து முடித்த பிறகு மீண்டும் புதிய போட்டியாளரை நிகழ்ச்சியில் சேர்ப்பது சாத்தியம் இல்லாத ஒன்று என கூறியுள்ளனர், அதே சமயம் நம்மை நம்பி கடல் கடந்து வந்தவர்களை கை விட கூடாது என்ற காரணத்தினால் அசானியை பாட சொல்லி வாய்ப்பு கொடுத்துள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் தன்னுடைய சிறப்பான குரலால் பாடி, அரங்கத்தை அதிர செய்துள்ளார் அசானி.
இவரது திறமையை கண்டு வியந்த நடுவர்கள் வெறும் எப்.எம் ரேடியோவில் பாட்டை கேட்டு இப்படி பாடுவது என்பதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இன்னும் பயிற்சிகள் தேவை என்று தெரிவித்த நடுவர்கள், இரண்டு மூன்று வாரங்கள் பாடட்டும், பிறகு என்ன செய்வது என்பது பற்றி யோசிக்கலாம் என்று முடிவெடுத்து அசானியின் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளனர். இலங்கை குயிலின் இன்னிசை தொடர்ந்து சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் ஒலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











