twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குழந்தைகள் பார்க்கும் பிக்பாஸ்..வாடி-போடின்னு பெண்களை திட்டும் அசீம்..கமல்ஹாசன் புத்தி சொல்வாரா?

    |

    பிக்பாஸ் வீட்டில் என்னதான் நடக்கிறது என ரசிகர்கள் கோபமாக கேட்டு வருகின்றனர்.

    கடந்த எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு மிகக்கேவலாமாக பிக்பாஸ் பெண் போட்டியாளர்கள் அவமதிக்கப்படுகின்றனர்.

    சக பெண் போட்டியாளரை வாடி போடி என பேசும் அசீம், உடல் பலத்தை வைத்து வம்புக்கு போகும் அசல் கோலாரை கண்டிக்க திராணியற்று மற்ற போட்டியாளர்கள் இருப்பதை காணமுடிகிறது.

    ச்சீ.. படுகேவலமா சண்டை நடக்குது.. சைலன்ட்டா வேடிக்கை பார்க்கும் பிக்பாஸ்.. செருப்பு வரை வந்துடுச்சே ச்சீ.. படுகேவலமா சண்டை நடக்குது.. சைலன்ட்டா வேடிக்கை பார்க்கும் பிக்பாஸ்.. செருப்பு வரை வந்துடுச்சே

     பிக்பாஸ் சீசன் 6-ல் பெண் போட்டியாளர்கள் நடத்தப்படும் விதம்

    பிக்பாஸ் சீசன் 6-ல் பெண் போட்டியாளர்கள் நடத்தப்படும் விதம்

    பிக் பாஸ் வீட்டில் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பெண் போட்டியாளர்கள் கௌரவ குறைவாக நடத்தப்படுவதை இந்த சீசனில் பார்க்க முடிகிறது. உடல் ரீதியாகவும் வார்த்தைகளாலும் செயல்களாலும் பெண் போட்டியாளர்களுக்கு நடக்கும் மறைமுக தாக்குதல்கள் சக போட்டியாளர்கள் கண்டும் காணாமல் இருப்பதையும் காணமுடிகிறது. இதன் ஒரு வெளிப்பாடு இன்று நடந்த போட்டியில் வெடித்தது. ஆனால் ஏமாற்றத்துக்குரிய விஷயம் என்னவென்றால் ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசிய போட்டியாளரை ஒரு சிலர் தவிர யாருமே கண்டிக்காதது. அதிலும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்றால் அது சரிதான் என்று அசல் கோலார் போன்றவர்கள் பேசியதை காண முடிந்தது.

     நாகரீக சமுதாயத்தில் பெண்களுக்கு மரியாதை..பிக்பாஸ் வீட்டில் கிடைக்காதா?

    நாகரீக சமுதாயத்தில் பெண்களுக்கு மரியாதை..பிக்பாஸ் வீட்டில் கிடைக்காதா?

    ஒரு நாகரிக சமூகம் என்பது என்னவென்றால் பெண்கள் குழந்தைகளை மதிப்பது. அவர்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பது தான். நாகரிக சமூகம், நாகரீக சமூகம் பற்றி பேசுகிறார்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள், நடை உடை பாவனைகளில் மேல்நாட்டு பாணியில் நாகரிகம் என்று சொல்லிக் கொள்பவர்கள், தனிப்பட்ட முறையில் எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை பிக் பாஸ் வீட்டில் காண முடிகிறது என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதற்கு முன் இல்லாத ஒரு மோசமான நிகழ்வை இந்த சீசன் 6-ல் பார்க்க முடிகிறது. இதை கமல்ஹாசன் கண்டிப்பாக கண்டித்து வழிநடத்துவார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

     பெண்களிடம் தரக்குறைவாக நடப்பது முதல்வாரத்தில் கண்டிக்காத கமல்

    பெண்களிடம் தரக்குறைவாக நடப்பது முதல்வாரத்தில் கண்டிக்காத கமல்

    பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் முதல் வாரத்திலேயே பரபரப்பாக இயங்கினாலும், அதில் சிலர் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்களுடைய அநாகரிக செயலை காண்பித்தனர். குறிப்பாக பெண்களிடம் மரியாதை குறைவாக நடப்பது என்பதை பார்க்க முடிந்தது. அதில் குறிப்பாக அசீம் பிக்பாஸ் சீசன் ஆரம்பித்ததில் இருந்து மகேஸ்வரி உடன் மோதலில் கௌரவ குறைவான வார்த்தைகளை முதல் வாரத்திலேயே மகேஸ்வரிக்கு எதிராக பயன்படுத்தினார். ஆனால் அதை கமல்ஹாசன் கண்டிக்கவில்லை, இதனுடைய விளைவு அசீம் இன்று மிக மோசமாக போட்டியாளரிடம் நடந்ததை காண முடிந்தது.

     குழந்தைகள் பார்க்கும் பிக்பாஸில் பெண்களுக்கு எதிரான போக்கு

    குழந்தைகள் பார்க்கும் பிக்பாஸில் பெண்களுக்கு எதிரான போக்கு

    ஒரு சிறிய விஷயமானாலும் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கவனத்துடன் நடக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் கமல், பெண்களை வாடி-போடி என சக போட்டியாளர்கள் பேசுவதை குழந்தைகள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சொல்வார் என எதிர்பார்ப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்றைய போட்டியில் தங்களுடைய இடத்திற்கான வாதத்தை வைக்கும் பொழுது ஆரம்பம் முதலே தனது அத்துமீறலை காண்பிக்க ஆரம்பித்தார் அசீம் ஒவ்வொருவரையும் நேரடியாக அவர்கள் மனது புண்படும்படி பேச ஆரம்பித்தார். நீ எல்லாம் என்ன வேலை செய்தாய், தூங்கித்தான் வழிந்தாய் என்று வம்புகள் பேச ஆரம்பித்தார். அவர் திட்டமிட்டு இன்று செயல்படுவது போல் தெரிந்தது.

     வெள்ளைச் சட்டை போட்டால் பெரிய ஆளா போடா

    வெள்ளைச் சட்டை போட்டால் பெரிய ஆளா போடா

    முதலில் ஆயிஷாவை வம்பு இழுத்த அவர் பின்னர் விக்கிரமனை வம்பு இழுத்தார், விக்ரமன் லேசாக பேச ஆரம்பித்தவுடன் "என்னடா நீ என்ன பெரிய ஆளா வெள்ளை சட்டை போட்டா பயந்துருவோமா போடா டேய்" என்று அவதூறாக பேசினார். விக்ரமன் பொறுமை காத்ததால் அந்த இடம் சமாதானமாக முடிந்தது. அடுத்து ஆயிஷாவை திட்டத் தொடங்கியதும் ஆயிஷா பதில் பேச கையை நீட்டி பேசாதே என்று ஆணாதிக்க மனப்பான்மையில் பேசத் தொடங்கினார். நீங்கள் கையை நீட்டும் போது நான் நீட்ட கூடாதா என்று ஆயிஷா கேட்க ஒரு கட்டத்தில் வாடி, போடி என்றெல்லாம் மிக கேவலமாக பேச ஆரம்பித்தார். அதை ஹவுஸ்மேட்ஸ்கள் தடுக்காமல், கண்டிக்காமல் அமைதியாக இருந்தனர்.

     விக்ரமனை கேவலமாக பேசிய அசீம்

    விக்ரமனை கேவலமாக பேசிய அசீம்

    இது பற்றி விக்கிரமன் கேள்வி எழுப்பியபோது மறுபடியும் விக்ரமன் உன் வேலையை பார்த்துக் கொண்டு போடா, அவ்வளவுதான் என்றெல்லாம் விக்கிரமனை நேரடியாக திட்டினார். இந்த நேரத்தில் ஹவுஸ் மேட்ஸ்கள் யாருமே அவரை கண்டிக்கவே இல்லை. ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசுவது தவறு, வாதத்தை மட்டும் வைத்து விட்டு செல்லுங்கள் என்று ஒருவர் கூட சுட்டிக்காட்டாதது மோசமான விஷயம். தகராறு முற்றிய நிலையில் என்னை வாடி பொடி என்று போடு என்று எப்படி அழைக்கலாம் என்று ஆயிஷா செருப்பை கழற்ற அந்த பிரச்சினையை பெரிதாக மாற்றி செருப்பை எப்படி கழட்டலாம் என்று பேச ஆரம்பித்தனர்.

     ஷிவின் தவிர கண்டிக்க திராணியற்ற ஹவுஸ்மேட்ஸ்கள்

    ஷிவின் தவிர கண்டிக்க திராணியற்ற ஹவுஸ்மேட்ஸ்கள்

    அப்பொழுது ஷிவின் தலையிட்டு "முதலில் ஒரு பெண்ணிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள், வாடி போடி என்று பேசியதால் இந்த பிரச்சனை பெரிதானது, அவர் செருப்பை கழற்றினார் இரண்டுமே தவறான சம்பவம்" என்று கூறினார். ஷிவின் தவிர வேறு ஒருவர் கூட இந்த பிரச்சனை பற்றி கவலைப்படவில்லை. முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள பெண்கள் சக போட்டியாளர்களை நம்பித்தான் வந்துள்ளனர். அதில் ஒரு போட்டியாளரால் இன்னொரு பெண் போட்டியாளருக்கு பாதுகாப்பு குறைவு, அவமானம் நடக்கும்போது மற்றவர்கள் அந்த பாதிக்கப்பட்ட போட்டியாளருக்கு ஆதரவாக நிற்க வேண்டும். ஆனால் இந்த வீட்டில் அது இல்லாதது இவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய இடத்திலிருந்து வந்தாலும் தனிப்பட்ட முறையில் கோழைகள் என்பதை காட்டுகிறது" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

     அசல் கோலாரின் ஆணாதிக்க மனப்பான்மை

    அசல் கோலாரின் ஆணாதிக்க மனப்பான்மை

    மற்றொருபுறம் பெண்கள் குறித்த இவர்களுடைய பார்வை எவ்வளவு மோசமானது என்பது வெளிப்பட்டது, அசல் கோலாரின் ஆணாதிக்க மனோபாவம். இந்த விவகாரம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அசல் கோலார் தன்னுடைய ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்தினார். திடீரென அசிமுக்கு ஆதரவாக குதித்த அவர் தனலட்சுமியை வம்புக்கு இழுத்தார். நீ என்னை வாடா போடா என்று சொல்லலாம் அசீம் வாடி போடி என்று சொல்லக்கூடாதா? அசீம் சொன்னது சரிதான் நீங்கள் எல்லாம் தகுதி இல்லாதவர்கள், ஓரம் போ என்றெல்லாம் அசல் கோலார் தனலட்சுமியை தரக்குறைவாக பேச ஆரம்பித்தார்.

     தவறை கண்டிக்காத ஹோம்மேட்ஸ்கள்..சரிதான் என வாதிட்ட அசல் கோலார்

    தவறை கண்டிக்காத ஹோம்மேட்ஸ்கள்..சரிதான் என வாதிட்ட அசல் கோலார்

    அசீம் செய்தது தவறு என கண்டிக்காதது ஹோம் மேட்ஸ்களின் கோழைத்தனமான செயல் என்றால், அசீம் செய்ததை, வாடிப்போடி என்று திட்டியது சரிதான் என்று அசல் கோலார் பேசுவது ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம். அவருக்கு தான் என்ன பேசுகிறோம் என்பதை தெரியாத நிலையில் இதை பேசுவது மிக மோசமான நிகழ்வு. இதற்கு முன் பிக்பாஸில் இதுபோன்று எந்த போட்டியாளர்களும் நடந்ததில்லை. பாலாஜிக்கும் சனமுக்கும் நடந்த வாக்குவாதத்தில் கூட இந்த அளவு அத்துமீறல் எங்கும் நடந்ததில்லை. இந்த விவகாரத்தில் இந்த வாரம் கமல் கண்டிப்பாக அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை தராவிட்டால் பிக்பாஸ் மீதான மதிப்பு குறையும். அசீம் போன்றவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியற்றவர்கள். ஒரு சாதாரண வீட்டில் பெண்களுக்கு எதிரான மனநிலையில் நடந்துக்கொள்ளும் அசீம் போன்றவர்கள் சமுதாயத்தில் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

    English summary
    Fans are asking angrily what is happening in the Bigg Boss house, Bigg Boss female contestants are insulted, Aseem calls a fellow female contestant "Vadi Podi" , other contestants can be seen not having the courage to reprimand the original Kolar who goes on a rampage with physical strength.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X