பிக்பாஸ் சிறையில் தள்ளப்பட்ட அசீம்.. ட்ரோல்களால் நிரம்பி வழியும் சமூக வலைதளங்கள்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கினர் அசீம் மற்றும் ஷிவின். பொம்மை டாஸ்க் உள்ளிட்டவற்றில் இவர்களின் செயல்பாடு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தது.
இதனிடையே, இவர்கள் இருவரையும் மறு உத்தரவு வரும்வரை சிறைக்கு செல்ல பிக்பாஸ் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்குரிய பிரத்யேக உடையுடன் இருவரும் சிறைக்கு சென்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் தான் அஞ்சமாட்டேன் என்று அசீம் தெரிவித்தார். இவரது சிறைவாசம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சம்பவங்கள் ஓவர்லோடு ஆகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த வித்தியாசமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற பொம்மை டாஸ்க் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

சர்ச்சைக்குள்ளான அசீம்
போட்டியாளர்கள் அனைவரும் பொம்மைகளுக்காக அடித்துக் கொண்ட சம்பவங்களை பார்க்க முடிந்தது. இதில் முக்கியமான போட்டியாளராக அசீம் மற்ற போட்டியாளர்களுடன் அதிகமாக முட்டி மோதினார். இதையடுத்து இன்றைய தினம் ஷிவினுடன் அசீமும் பிக்பாஸ் சிறைக்கு செல்ல பிக்பாஸ் உத்தரவிட்டார்.

சிறையில் தள்ளப்பட்ட அசீம்
இதையடுத்து அதற்கான உடையுடன் இருவரும் சிறைக்கு சென்றனர். அப்போது தான் இதற்கெல்லாம் அசர மாட்டேன் என்று மைனா நந்தினியிடம் அவர் தெரிவித்தார். அசீமின் மோசமான நடவடிக்கைகளால் அவர்மீது ரசிகர்களுக்கு அதிகமான வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிறைக்கு சென்றது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.

அசீமை வைத்து செய்யும் ரசிகர்கள்
இதையடுத்து பல்வேறு மீம்ஸ்களால் அவரை கலாய்த்து வருகின்றனர். அவர் சிறையில் இருந்தபடி ஒன்று, இரண்டு என்று எண்ணும்படியாக வீடியோவை பகிர்ந்து அதை கவுண்டமணி -செந்தில் காமெடியுடன் இணைத்து அசீமை கலாய்த்துள்ளனர். இது போன்ற அதிகமான மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

தொடர் சர்ச்சைகளில் அசீம்
அசீம் பொம்மை டாஸ்கில் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் அனைத்து போட்டியாளர்களிடமும் மிகவும் மோசமாக நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் தனலட்சுமியின் நெஞ்சில் கைவைத்து அவரை தள்ளி விட்டதும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

வெறுப்பை சம்பாதித்த அசீம்
பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது டாஸ்க்குகளை நிறைவேற்ற நியாயமற்ற முறைகளில் நடந்துக் கொள்வதை பார்க்க முடிகிறது. இவ்வாறு செயல்படும் போட்டியாளர்கள் உடனடியாக ரசிகர்களின் கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்களின் வெறுப்பை அசீம் சம்பாதித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











