அசீமின் கொடுங்கோல் ஆலோசனை..தலையாட்டும் ராபர்ட் மாஸ்டர்..எடுபடாமல் போன விக்ரமன் ஆலோசனை

ராஜா-ராணி டாஸ்க்கில் நேற்று தலைக்கனம் பிடித்து ஆடிய அசீம் ஹவுஸ் மேட்ஸ்களால் கண்டிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

பிக்பாஸிடம் பேசிவிட்டு வெளியில் வந்து மாற்றி பேசி உண்மையை மறைத்து தன்னை எதிர்த்தவர்களை பழிவாங்கும் போக்கில் நடந்ததை காணமுடிந்தது.

பிக் பாஸ் ராஜா ராணி டாஸ்கில் அசீம், ராபர்ட் மாஸ்டர் இருவரும் தங்களது சொந்த பகைகளில் டாஸ்கினை பயன்படுத்துவதை பார்க்க முடிந்தது.

 பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டு வெளியே கைப்புள்ளையாக கெத்துக்காட்டிய அசீம்

பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டு வெளியே கைப்புள்ளையாக கெத்துக்காட்டிய அசீம்

நேற்று ஆடாத ஆட்டம் ஆடிய அசீம் மொத்த ஹவுஸ் மேட்ஸ்களால் கேள்வி கேட்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். அதற்கு பிறகு கேமில் பங்கேற்கவில்லை என்று ஒதுங்கிக்கொண்டார். பின்னர் பிக் பாஸ் என்னை கூப்பிடுங்கள் என்றெல்லாம் சொல்லி கன்ஃபஷன் ரூம் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார். பிக் பாஸ் அவரிடம் ஒரு டாஸ்க் கொடுத்தார். அருங்காட்சியத்தில் உள்ள பொருட்களை ஒரு சேவகரை பயன்படுத்தி திருட வேண்டும் என்று டாஸ்க். ஆனால் வெளியில் வந்த அசீம் பிக் பாஸ் என்னிடம் ஒரு சில விஷயங்கள் சொன்னார் அதை படிக்கிறேன் என்று கூறி கூட்டத்தை கூட்டினார்.

 பிக்பாஸையே மோசடிக்கு கூட்டுச் சேர்த்த அசீம்

பிக்பாஸையே மோசடிக்கு கூட்டுச் சேர்த்த அசீம்

பிக் பாஸிடம் தனியாக நான் பழைய கண்டிஷன்களை படிக்கிறேன் பிக்பாஸ் என்று சொல்லிவிட்டு பழைய விதிமுறை ஃபைலை எடுத்து மீண்டும் படித்துவிட்டு கண்டிப்பாக டாஸ்க்கை சீரியஸ் ஆக விளையாட வேண்டும் காமெடி எல்லாம் பண்ண கூடாது என்று பிக்பாஸ் கண்டிப்பாக சொல்லியிருக்கிறார் என்று மோசடியாக சொன்னார். அப்போது அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது திடீரென பிக்பாஸ் தலையிட்டு டாஸ்கை ஜாலியாக விளையாடுங்கள், முக்கியமாக ஃபன் பண்ணுங்க என்று சொல்லி அசீம் முகத்தில் கரியை பூசினார். இதை குறும்படமாக கமல் இந்த வாரம் காட்ட வாய்ப்புள்ளது.

 தனிப்பட்ட பகையை பதவியை பயன்படுத்து வேட்டையாடிய அசீம்

தனிப்பட்ட பகையை பதவியை பயன்படுத்து வேட்டையாடிய அசீம்

பின்னர் மீண்டும் தளபதி உடையை மாட்டிக்கொண்டு இரவு முழுவதும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். காலையில் தனது சுயரூபத்தை அசீம் காட்ட ஆரம்பித்தார். ஒவ்வொருவரையும் தண்டனை கொடுத்தே தீர வேண்டும் என்றெல்லாம் பேசி ஒவ்வொரு நபர் மீதும் வன்மத்தை காட்ட ஆரம்பித்தார் நேற்று நடந்த சம்பவத்தால் அனைவரும் பெரும்பாலும் எதுவும் பேசவில்லை. மூடு அவுட்டாகி இருந்ததால் ராஜா ராணி டாஸ்க் ஜாலியாக போகவில்லை. இதற்கு அசீமும், அசீம் பேச்சை கேட்டு ஆடிய ராஜா ராபர்ட் மாஸ்டருமே காரணம்.

 மங்குனி அரசர் ராபர்ட் மாஸ்டர்

மங்குனி அரசர் ராபர்ட் மாஸ்டர்

ராப ராபர்ட் மாஸ்டருக்கு ரச்சிதாவை பார்ப்பது தவிர வேறு சொந்த அறிவு இல்லை என்பதை பல கட்டங்களில் இந்த டாஸ்க்கில் பார்க்க முடிந்தது. மாஸ்டர் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தவர் ராஜா டாஸ்க் கிடைத்தவுடன் தன்னுடைய அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தை பார்க்க முடிந்தது. அவர் சொந்த புத்தியில் முடிவு எடுக்காமல் அசீம் சொன்னதைக் கேட்டு முடிவு எடுத்ததை காண முடிந்தது. இதை ரச்சிதாவே பொறுக்க முடியாமல் சில இடங்களில் தலையிட்டு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். விக்கிரமனும் தலையிட்டார். ஃபன் டாஸ்க்கில் ஒரு நாள் முழுவதும் தூங்காமல் இருந்த ஷிவினை மீண்டும் ஒரு நாள் முழுவதும் தூங்கக்கூடாது என்றெல்லாம் ராபர்ட் ஷிவினுக்கு தண்டனை கொடுத்தார்.

 ஷிவின் மீது தனிப்பட்ட வன்மம் கொண்ட ராபர்ட் மாஸ்டர்

ஷிவின் மீது தனிப்பட்ட வன்மம் கொண்ட ராபர்ட் மாஸ்டர்

ராபர்ட் மாஸ்டருக்கு ஷிவின் மேல் என்ன கோபம் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில், கோபாத்தில் ஷிவினை பழிவாங்கும் வேலையை ராஜா டாஸ்க்கில் ராபர்ட் செய்ததை காண முடிந்தது. முதலில் ஷிவின் மேக்கப்பை கலைக்க வேண்டும் என நேற்றிலிருந்து தண்டனை என்று சொல்லி கொடுத்தார். நேற்று நடக்கவில்லை என்று இன்று மீண்டும் எண்ணெயைய் கொண்டு வர சொல்லி ஷிவின் முகத்தில் உள்ள மேக்கப் முழுவதும் கலைக்க சொன்னார். அதேபோல் பாட்டி வேடம் போட வைக்க வேண்டும் என்று ஒரு தண்டனை கொடுத்தார். ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை. பின்னர் ஒரு நாள் முழுவதும் ஷிவினை தூங்க விடக்கூடாது அதை மற்றொரு கண்காணிக்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தார்.

 ஷிவின் ஒரு பைத்தியம் வார்த்தை விட்ட ராபர்ட் மாஸ்டர்

ஷிவின் ஒரு பைத்தியம் வார்த்தை விட்ட ராபர்ட் மாஸ்டர்

தனியாக வந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதும் அசீம் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆமோத்துக்கொண்டு இருந்தவர் பின்னர் இந்த ஷிவினுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், அது பைத்தியம் போல் நடந்து கொள்கிறது என்றெல்லாம் வார்த்தைகளை விட்டார். மொத்தத்தில் இந்த ராஜா ராணி டாஸ்க் ராபர்ட் மாஸ்டரின் தெளிவு இல்லாத புத்தியாலும், அசீமினுடைய சூழ்ச்சி புத்தியாலும் நடத்தப்பட்டதால் கலையிழந்து போனது. மக்களுக்கும் எண்டெர்டெயின்மெண்ட் கிடைக்கவில்லை.

 அசீமின் தாங்கமுடியாத வள வள பேச்சு

அசீமின் தாங்கமுடியாத வள வள பேச்சு

இதை அவ்வப்போது கண்டஸ்ட்டுகள் குறிப்பிட்டு சொன்னாலும் அசீமுடைய வளவளவள என்று பேசும் பேச்சால் யாரும் அசீமுக்கு எதிராக பேசாமல் இருந்ததை காண முடிந்தது. டாஸ்கில் ஒழுங்காக விளையாடி தூக்கம் கூட தூங்காமல் விளையாடிக் கொண்டிருந்த ஏடிகேவை சாப்பிட கூட விடாமல் என்னை பற்றி எப்படி பேசலாம் என்று அசீம் சண்டையிட கடைசியில் அவர் கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்று விட்டதை காண முடிந்தது. மொத்தத்தில் பொதுமக்களுக்கு அழகாக என்டர்டெயின்மெண்டாக செல்ல வேண்டிய ஒரு போட்டியை அசீம் என்கிற தனி நபரால் மோசமான நடத்தியால் ராபர்ட் மாஸ்டர் என்ற மங்குனி அரசரால் மொத்தமாக பாழானது என்று சொல்ல வேண்டும்.

 கமல்ஹாசன் இந்தவாரம் குறும்படம் போடுவாரா?

கமல்ஹாசன் இந்தவாரம் குறும்படம் போடுவாரா?

இந்த வாரம் நடந்த டாஸ்க் அசீமின் தனிப்பட்ட வேலை பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே வந்து மோசடியாக பிக் பாஸ் சொல்ல சொன்னாரு என்று ஒரு கூட்டத்தை நடத்தி டாஸ்க் சீரியஸ் ஆக நடக்க வேண்டும் என்று திசை திரும்பிய அசீமின் நடத்தைப்பற்றி கமல்ஹாசன் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X