Asha bhosle Health Update: பாடகி ஆஷா போஸ்லேக்கு தீவிர சிகிச்சை.. மாரடைப்பு அல்ல.. பேத்தி விளக்கம்!

மும்பை: பிரபல பாடகி ஆஷா போஸ்லேவுக்கு திடீரென நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 92. மும்பையில் உள்ள Breach Candy Hospital மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலைகுறித்தும், சிகிச்சை குறித்தும் மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும்.

ஆஷா போஸ்லேவின் பேத்தி Zanai Bhosle இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், "என் பாட்டி ஆஷா போஸ்லே மாரடைப்பு மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தயவுசெய்து எங்கள் தனியுரிமையை மதித்து நடந்து கொள்ளுங்கள், விரைவில் நல்ல செய்தி உங்களை வந்து சேரும் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அவர் விரைவில் நலம் பெற பலர் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

Asha Bhosle Hospital
Photo Credit:

பாடகி ஆஷா போஸ்லே: தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா, நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கலாம். வயது மூப்பு காரணமாக இவை எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே குறையும், இதனால், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதுபோன்ற பிரச்சனையில் தான் தற்போது ஆஷா போஸ்லேவும் இருக்கிறார். ஆனால்,இதனால் பெரிய சிக்கல் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12ஆயிரம் பாடல்கள்: பாடகி ஆஷா போஸ்லே1933ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 92. இசைத்துறையில் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மிகச் சிறந்த பாடகியாக திகழ்ந்து வருகிறார். இதுவரை 20 மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். அவர், கச்சேரி, கஜல், பாப், நாட்டுப்புறம் போன்ற பலவற்றிலும் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தார்.

ஹிட் பாடல்கள்: பாடகி ஆஷா போஸ்லே இளையராஜா இசையில் 1987ஆம் ஆண்டு வெளியான 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் இடம் பெற்ற "செண்பகமே செண்பகமே..." என்ற பாடலை பாடினார். தமிழ் திரையிசை பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இதைத்தொடர்ந்து "நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி", "ஓ...பட்டர்பிளை", "வளையோசை", எங்கெங்கே... எங்கெங்கே இன்பம்" என பல பாடல்களை பாடிய இவர். ஏஆர் ரஹ்மான் இசையில் அலைபாயுதே படத்தில் "செப்டம்பர் மாதம் செப்டம்பர்", "வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதல் காதல்" என காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் ஆஷா போஸ்லே இந்திய இசையில் அழியாத தடம் பதித்துள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டுமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X