ஆஷா போஸ்லேவுக்கு இத்தனை கோடிகள் சொத்தா? வெளிநாட்டு வருமானம் மட்டும் இத்தனையா?
சென்னை: உலகப் புகழ்பெற்ற இந்திய பாடகி ஆஷா போஸ்லே. அவர் அவரது 92 வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு மொத்த இந்திய திரையுலகையும் வருத்தத்தி ஆழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் ஆஷா போஸ்லே பாடியுள்ளார். அவரது மறைவுக்குப் பின்னர் அவர் குறித்த பல தகவல்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வகையில் இந்த தொகுப்பில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து காணலாம்.
ஆஷா போஸ்லே அவரது இளம் வயதிலேயே பாடல்கள் பாடத் தொடங்கி விட்டார். தந்தையின் மறைவு காரணமாக குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை தனது சகோதரி லதா மங்கேஷ்கருடன் பகிர்ந்து கொள்ள சினிமாவில் பாடல்களைப் பாடத் தொடங்கினார். 75 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பாடகியாக ஜொலித்தவர் ஆஷா போஸ்லே.

இவர் 12,000 திரைப்படப் பாடல்களைப் பாடிய பாடகி என்ற கின்னஸ் சாதனையை படைத்தார். தமிழிலும் இவர் பாடிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக ஹே ராம் படத்தில் இவர் பாடிய நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி என்ற பாடல் எப்போது கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சி தானாகவே கிடைத்து விடுகிறது.
ஆஷா போஸ்லே மிகவும் திறமையான பாடகி என்றாலும் மிகவும் பொறுப்பான பெண்ணும் கூட. இதனால் தனது வருமானத்தை தனது குடும்பத்தினரின் எதிர்கால நலனுக்காக உலக அளவில் 'ஆஷா' என்ற சர்வதேச ஹோட்டலை உருவாக்கினார். துபாய், குவைத், அபுதாபி, பஹ்ரைன் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த இந்திய உணவுகளை அதிகம் பரிமாறும் ஹோட்டலை உருவாக்கினார். இது அவர் செய்த மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்று.

முதலீடு: இவர் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு மும்பையிலேயே வீடுகளும், பங்களாக்களும் உள்ளன. அதுவும் குறிப்பாக அவரது ஹோட்டல் பிசினஸைப் போலவே ரியல் எஸ்டேட் பிசினஸ் இவருக்கு மிகவும் கை கொடுத்தது. அந்த வகையில் அவரது மொத்த சொத்து மதிப்பு இந்தியாவில் மட்டும் சுமார் 100 கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், வெளிநாட்டில் அவரது ஹோட்டல்களுக்கு செய்யப்பட்ட முதலீட்டின் மூலம் அவை, சுமார் 100 கோடிகள் முதல் 150 கோடிகள் வரை சொத்தாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
பணக்கார பாடகி: இந்தியாவில் இருக்கும் டாப் 10 பணக்கார பாடகிகளில் இவரும் ஒருவர். வீடு, பங்களா, கார்கள், ஹோட்டல்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள், பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி என எல்லாவற்றையும் சேர்த்தால் சுமார் 200 முதல் 260 கோடிகள் வரை சொத்து மதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











