அம்மா-மகளாக நடிக்கிறாங்களாமே.. ஹீரோயின் ஆகும் பிரபல நடிகையின் மகள்.. ரசிகர்கள் வரவேற்பு!

By

கொச்சி: பிரபல நடிகையின் மகள் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தில் அம்மாவும் மகளும் ஒன்றாக நடிக்கின்றனர்.

கமல்ஹாசனின் 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர், மலையாள நடிகை ஆஷா சரத்.

கமலின் தூங்காவனம், அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான பாகமதி ஆகிய படத்திலும் நடித்திருந்தார்.

தொடர் குங்குமப்பூ

தொடர் குங்குமப்பூ

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடனக் கலைஞரான இவர், பரதநாட்டியம், குச்சுப்பிடி, கதகளி, மோகினியாட்டம் போன்ற பல நாட்டியங்களை கற்றவர். நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். குங்குமப்பூ என்ற மலையாள டிவி தொடர் மூலம் பிரபலமான இவர், பிறகு சினிமாவுக்கு வந்தார்.

அடுத்த பாகம்

அடுத்த பாகம்

த்ரிஷயம் படத்தில் நடித்ததன் மூலம் அதிக பிரபலமானார். இந்த படம் மூலமாகவே தமிழ், தெலுங்கும் சென்றார். இப்போது த்ரிஷயம் படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. மோகன்லால், மீனா, எஸ்தர் அணில் நடிக்கும் இந்தப் படத்தில் ஆஷா சரத்தும் முந்தைய பாகத்தில் நடித்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார்.

ரேடியோ ஜாக்கி

ரேடியோ ஜாக்கி

ஆஷாவின் கணவர், டி.வி. சரத் துபாயில் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு 1995 ஆம் ஆண்டு துபாய் சென்ற ஆஷா, அங்கு ரேடியோ ஜாக்கியாவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தார். இவருக்கு உதாரா, கீர்த்தனா என இரண்டு மகள்கள். இவர்கள் துபாயில் செட்டிலாகி உள்ளனர்.

நடிகையாக அறிமுகம்

நடிகையாக அறிமுகம்

நடிப்பதற்காக கேரளா வந்த ஆஷா, தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் ஆஷா சரத்தின் மகள் உத்தரா மலையாளப் படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். பிரபல இயக்குனர் மனோஜ் கனா இயக்கும் படம், கெட்டா. இதில் ஆஷா சரத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் ஆஷாவின் மகள் உத்தராவும் அறிமுகமாகிறார்.

நடிக்க விருப்பமா?

நடிக்க விருப்பமா?

'இதில் நாங்கள் அம்மா - மகளாகவே நடிக்கிறோம். இயக்குனர் என் மகளுக்கு நடிக்க விருப்பமா என்று கேட்டார். நான் அவளிடம் கேட்டேன். மகிழ்ச்சியடைந்தாள் என்று தெரிவித்துள்ள ஆஷா, சமீபத்தில் த்ரிஷ்யம் 2 ஷூட்டிங்கை முடித்துள்ளார். உத்தரா, என்ஜினீயரிங் முடித்துள்ளார். அவரை சினிமாவுக்கு வரவேற்று ரசிகர்கள், சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X