சங்கீதாவுக்கு மாலை போட வேண்டும்.. கோயில் கட்ட வேண்டும்.. இலங்கை எம்.பி களத்தில் குதிச்சிருக்காரு
சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி நீலாங்கரை வீட்டில் தன்னை தங்குவதற்கு விஜய் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் இன்றும் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இப்படி அடுத்தடுத்து விஜய்க்கு எதிரான மூவை எடுத்துவரும் சங்கீதா பற்றி; யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை எம்.பி ஒருவர் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த 27ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். அதனை நான் தட்டிக்கேட்டேன். எனவே அவர் என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். அதேபோல் என்னை பொருளாதாரத்திலும் முடக்கினார். செலவுக்கு பணம் தரவில்லை. நடிகையுடனான உறவை கண்டிப்பாக முறித்துக்கொள்வேன் என்றும் உறுதியளித்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

நடிகையின் பெயரை சொல்வேன்: அதன் காரணமாக பெரிய மன உளைச்சலில் இருந்தேன். விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை பகிர்ந்ததால் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தார். அந்தப் செய்திருந்தார். பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதற்காக அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகைக்கும், எனது கணவருக்கும் இருக்கும் உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்குவேன். தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையின் பெயரை சொல்வேன்" என தெரிவித்திருந்தார்.
திரிஷாவுடன் வருகை: அவரது இந்த மனு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று முன்தினம் நடந்த திருமணம் ஒன்றில் விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக கலந்துகொண்டார்கள். அது மேற்கொண்டு கோபத்தை தவெகவினருக்கே ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் எப்படி அண்ணா உங்களுக்கு சப்போர்ட் செய்வது என ஓபனாகவே பேச தொடங்கிவிட்டார்கள். பொதுமக்களிடம் மட்டுமின்றி திரைத்துறைக்குள்ளேயே விஜய்க்கு எதிராக கருத்துக்கள் உருவாகிவிட்டன.
புதிய மனு: இப்படிப்பட்ட சூழலில் சங்கீதா இன்று புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், "விஜய்யுடன் 26 ஆண்டுகள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளை பெற்று வளர்த்திருக்கிறேன். குழந்தைகளையும், விஜய்யையும் சிறப்பாகவே கவனித்துக்கொண்டேன். அவரது அரசியல் சூழல் கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சி செய்தும் பிரிந்து செல்ல மறுக்கிறார். விவாகரத்து மனு தாக்கல் செய்தால் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். பிரிட்டன் குடியுரிமை இருக்கும் எனக்கு சென்னையில் தனியாக வீடு இல்லை. விவாகரத்து கிடைக்கும் வரை விஜய் வீட்டில் வசிக்க எனக்கு உரிமை இருக்கிறது. அந்த வீட்டில் நான் தங்க விஜய் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இலங்கை எம்.பி வீடியோ: இந்நிலையில் விஜய் - சங்கீதா விவகாரம் குறித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை எம்.பி அர்ச்சுனா என்பவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஒருவர் தனது வாழ்க்கையில் உச்சக்கட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் போது காலை வாரிவிட்டீங்களே சங்கீதா. நீங்கள் யாழ்ப்பாணத்தில் எங்கே இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு மாலை போட்டு கோயில் கட்ட வேண்டும். இப்படி ஒரு ஈனப்பிறப்பா? இதற்கு மேல் எனக்கு சொல்ல தெரியவில்லை. யாழ்ப்பாண தமிழனாக சங்கீதாவை நினைத்து வெட்கப்படுகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











