நடிகைக்கு சர்தார் 2 குழு கொடுத்த பிறந்தநாள் பரிசு.. ஸ்டார் வேல்யூ கூடிட்டே போகுதே
சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 96 பிரேம் இயக்கும் மெய்யழகன் படம் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் படத்தின் இன்னொரு நடிகையாக ஆஷிகா ரங்கநாத் கமிட்டாகியிருக்கிறார்.
நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக்கொண்டார்.

வந்தியத்தேவன்: குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் அந்தப் படத்தில் மற்றவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரத்தைவிட பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த அட்டகாசமான உழைப்புதான்.
ஜப்பான்: இந்த சூழலில் ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25ஆவது படமாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. பெரும் எதிர்பார்ப்புடன் அந்தப் படம் வந்தாலும் அவருக்கு தோல்வியை கொடுத்தது. தனது 25ஆவது படம் இப்படி மோசமான ரிசல்ட் வாங்கிவிட்டதே என்ற அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படும் சூழலில்; தனது அடுத்தடுத்த படங்களை தரமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்தார் 2: அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் சர்தார் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தண்ணீர் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்ததால் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து அந்தப் படத்தின் இரண்டாவது பாக ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
நட்சத்திர பட்டாளம்: சர்தாரில் கார்த்தியுடன் லைலா, ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்போது சர்தார் 2விலும் மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. முக்கியமாக எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் கமிட்டாகியிருப்பது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வளர்த்திருக்கிறது ரசிகர்களிடம்.
புதிய நடிகை: இந்நிலையில் சர்தார் 2வில் இன்னொரு நடிகையும் கமிட்டாகியிருக்கிறார். அவர் ஆஷிகா ரங்கநாத். 28 வயதாகும் அவர் கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கன்னடம், தெலுங்கு உள்ளிட்டமொழிகளில் நடித்திருக்கும் அவர் தமிழில் பட்டத்து அரசன் என்ற படத்தில் அறிமுகமானார். சற்குணம் இயக்கியிருந்த அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே சர்தார் 2 தனக்கு திருப்புமுனையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பிலிருக்கிறார் ஆஷிகா. அவருக்கு இன்று 28ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications