விஜய் படங்களில் புலி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: கொலைகாரன் ஹீரோயின்
Recommended Video
சென்னை: கொலைகாரன் பட ஹீரோயினுக்கு விஜய்யின் புலி படம் என்றால் மிகவும் பிடிக்குமாம்.
இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்து அழகிப் பட்டங்களை வென்ற ஆஷிமா நார்வால் கொலைகாரன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த கொலைகாரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படத்தை பார்த்தவர்கள் நல்லபடியாக விமர்சித்துள்ளனர். ஆக விஜய் ஆண்டனிக்கு மேலும் ஹிட் படம் கிடைத்துவிட்டது. இந்நிலையில் ஆஷிமா இன்டாகிராம் லைவில் தோன்றி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்பொழுது அவர் விஜய் பற்றி கூறியதாவது.
எனக்கு பிடித்த தமிழ் நடிகர் விஜய் தான். அவரின் தெறி படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்தேன். அவரின் நடிப்பை பார்த்து அசந்துவிட்டேன். அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் புலி. பலருக்கு அந்த படம் பிடிக்காமல் இருக்கலாம். என்னடா இவருக்கு புலி படம் போய் பிடித்திருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
நான் விஜய் ரசிகையாக்கும் என்று ஆஷிமா தெரிவித்துள்ளார். ஆஷிமா விஜய் பற்றி தெரிவித்த வீடியோவை அவரின் ரசிகர்கள் பெருமையுடன் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் வளர்ந்த பெண்ணுக்கு நம் விஜய் அண்ணாவின் அருமை பற்றி தெரிந்துள்ளது. எங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ஆஷிமா நார்வால் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலைகாரன் தவிர்த்து நரேஷ் சம்பத் இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலம் ஆரவ் நடித்துள்ள ராஜபீமா படத்திலும் ஆஷிமா நார்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்தில் ஓவியா கவுரவத் தோற்றத்தில் வருகிறார். ஆரவ் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு ஹீரோவாக ஒப்பந்தம் ஆன முதல் படம் இதுவாகும். அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஆஷிமா கோலிவுட் வந்த வேகத்தில் இரண்டு படங்களில் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











