»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
சினிமாவில் மட்டுமல்ல வெளியிலும் தனது வசதிக்குத் தக்கவாறு நடிக்கிறார் ஆசின்.

கேரளத்தில் பிறந்து தெலுங்கு, தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் அசினுக்கு தமிழைவிட தெலுங்கில் பயங்கர மவுசு.ஆந்திராவில் விஜய்சாந்திக்கு அடுத்தபடியாக நடிகைக்கு அதிக ரசிகர் மன்றங்கள் உருவாகியிருப்பது இவருக்குத் தானாம்.

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் ரவிக்கு ஜோடியாக வந்த மலபார் குயீன் தான் அஸின். தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்கும் இவர்இப்போது தமிழில் அஜீத்துடன் காட்ஃபாதர் படத்தில் நடித்து வருகிறார்.

தனக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் தான் ரொம்ப இஷ்டம் என்கிறார். இதற்கு முழுக் காரணம் தெலுங்கில் அதிக படவாய்ப்புகளும் டப்பும் கூடவே கிடைப்பதும் தான்.

ஆந்திராவில் சுனாமி தாக்கிய கடலோரப் பகுதிகளுக்குப் போய் தனது ரசிகர் மன்றங்கள் சார்பில் ஏராளமான நிவாரண உதவிகளைவழங்கியிருக்கிறார். ஒரு ஊர் பாக்கி விடாமல் போய் நிவாரணம் வழங்குங்கள் என்று ரசிகர்களை அசின் ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

கேரளத்தில் பிறந்தவரான அசின் தங்கள் மீது காட்டிய அன்பினால் ஆந்திராகாருக்களும் உருகிப் போய் விட்டனராம்.

தமிழ்நாட்டிலும்தான் ஆயிரக்கணக்கான பேர் இறந்தனர், ஏராளமான ஊர்களை சுனாமி காவு கொண்டது. ஆனால் அசின் ஒரு இடத்துக்கும்ஆறுதல் சொல்ல வரவில்லையே என்று யாராவது ஆச்சரியப்பட்டால் அதற்கு அஸின் பொறுப்பல்ல.

நடிக்க தெலுங்கு அளவுக்கு காசு கொடுத்தால் ஒருவேளை இங்கும் ஆறுதல் சொல்லுவாரோ என்னவோ?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil