Ashish Vidhyarthi: 23 ஆண்டுகால வாழ்க்கை.. ஆஷிஷ் வித்யார்த்தி முதல் மனைவி போட்ட போஸ்ட்டை பாருங்க!

மும்பை: தில், பகவதி, ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார்.

நடிகர், மோடிவேஷனல் ஸ்பீக்கர், ஃபுட் ரிவ்யூவர் என பன்முகத்தன்மை கொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று திடீரென 2வது திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகிலேயே பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவியும் பிரபல நடிகையுமான ரஜோஷி வித்யார்த்தி தனது 23 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த சோகத்தில் போட்ட பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Ashish Vidyarthis first wife Rajoshi Barua shares cryptic posts after actors second marriage

ஆஷிஷ் வித்யார்த்தி 2வது திருமணம்:

1962ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி பிறந்த ஆஷிஷ் வித்யார்த்தி அடுத்த மாதம் தனது 61வது பிறந்தநாளை தனது 2வது மனைவியுடன் கொண்டாட உள்ளார். நேற்று திடீரென ஆஷிஷ் வித்யார்த்திக்கும் தொழிலதிபர் ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

ஆஷிஷ் வித்யார்த்தி 2வது திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு ஒரு பக்கம் 60 வயதிலும் மனுஷன் கில்லியா இருக்காரே என கமெண்ட்டுகளை போட்டு வாழ்த்தியும் இந்த வயதில் 2வது திருமணம் தேவையா என ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

முதல் மனைவியும் மகனும்:

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரபல நடிகை ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பழம்பெரும் நடிகை சகுந்தலா பருவாவின் மகளான ரஜோஷி பருவாவை திருமணம் செய்துக் கொண்டார்.

ஆஷிஷ் வித்யார்த்திக்கும் ரஜோஷிக்கும் ஆர்த் வித்யார்த்தி எனும் ஒரு மகன் உள்ளார். 20 வயதை கடந்த மகன் இருக்கும் போது அப்பா இன்னொரு திருமணம் செய்துக் கொண்டிருக்கிறாரே என நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

முதல் மனைவி போட்ட போஸ்ட்:

தனது கணவர் ஆஷிஷ் வித்யார்த்திக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், அது குறித்து மறைமுகமாக நடிகை ரஜோஷி போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

Ashish Vidyarthis first wife Rajoshi Barua shares cryptic posts after actors second marriage

வாழ்க்கையே ஒரு புதிராட்டம் போன்றது தான் என்கிற அர்த்தத்தில், "Do not get PUZZLED in the puzzle called LIFE" என போட்டு சிங்கிளாக இருக்கும் தனது போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவியின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் கவலைப்படாதீங்க மேடம் உங்களுக்கான வாழ்க்கையை நீங்க ஹேப்பியா வாழுங்க என கமெண்ட் போட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X