Exclusive : கிளாமரில் குண்டூர் டாக்கிஸை தூக்கி சாப்பிடும் 'இஎமஇ': ஆஷ்னா சவேரி
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு நிச்சயம் 100 மீண்டும் சந்தானத்துடன் நடிக்க ஆசை: ஆஷ்னா சவேரி
சென்னை: இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படத்தில் முதன்முறையாக கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆஷ்னா சவேரி.
சாய் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் சர்மிளா மாண்ரே, ஆர்.சாவண்ட் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு'. இப்படத்தின் நாயகனாக விமல் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடித்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பூர்ணா.
தெலுங்கில் வெளியான குண்டூர் டாக்கிஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான இதில், முதன்முறையாக கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார் ஆஷ்னா.
இது தொடர்பாக ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கிராமத்துப் பெண்:
"நான் இப்போ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நடித்துள்ளேன். முதல் முறையா இந்த படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறேன். இந்த படத்தின் டிரெய்லருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கிளாமர் படம்:
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு திரைப்படம் முழுக்க முழுக்க கிளாமர் நிறைந்த படம். தெலுங்கில் வெளியான குண்டூர் டாக்கிஸ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். அந்த படம் போலவே இதிலும் கிளாமருக்கு குறைவிருக்காது. கதைக்குதேவைப்பட்டதால் நான் கிளாமராக நடித்துள்ளேன்.

இது அது அல்ல
இந்த படத்தை இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துடன் ஒப்பிடுகிறார்கள். நான் அந்த படத்தை பார்க்கவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த படம் அது மாதிரி இருக்காது. இது ஒரு ரொமான்டிக் காமெடி படம்.

ஆசை:
விமலுக்கு ஜோடியாக நடித்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அவர் ஒரு ஜாலியான மற்றும் எளிமையான மனிதர். தொடர்ந்து அவருடன் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

மீண்டும் நடிக்க ஆசை:
சந்தானம் மூலம் தான் தமிழில் நான் பிரபலமானேன். அவருடனும் மீண்டும் நடிக்க ஆசை இருக்கிறது. அதுபோல விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடிக்க விரும்புகிறேன்.

முழுக் கவனம்:
எனக்கு இப்படி தான் நடிக்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்றார் போல் என்னை மாற்றிக்கொள்வேன். இப்போது தெலுங்கில் ஒரு படம் நடிக்கிறேன். ஆனால் தமிழில் தான் இப்போது முழுமையாக கவனம் செலுத்துகிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











