நல்ல கதை அமைந்தால் ரஜினியை வைத்துப் படம் தயாரிப்பேன்! - ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்

By Shankar

சென்னை: நல்ல கதை அமைந்தால் நண்பர் ரஜினியை வைத்து படம் தயாரிப்பேன் என்று ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் கூறினார்.

ரஜினி நடித்த ஒரே ஹாலிவுட் படமான ப்ளட்ஸ்டோனைத் தயாரித்தவர் அசோக் அமிர்தராஜ். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் தயாரித்த தமிழ்ப் படம் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ். ஆனால் ஹாலிவுட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர் என்ற பெருமை அசோக் அமிர்தராஜுக்கு உண்டு.

கோச்சடையான்

கோச்சடையான்

ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அசோக் அமிர்தராஜ், நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தார். ரஜினியின் முதல் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பப் படம் கோச்சடையான் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

பாராட்டு

பாராட்டு

இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் முக்கியமான காட்சிகளை அவருக்கு ரஜினி தரப்பில் போட்டுக் காட்டினர். படம் பார்த்த அசோக் அமிர்தராஜ், சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டினார்.

குழந்தைகளோடு போய் பாருங்க

குழந்தைகளோடு போய் பாருங்க

இந்தப் படம் குறித்து அவர் கூறுகையில், "விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம் ஹாலிவுட்டிலும் உலக அளவிலும் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கோச்சடையான்தான் இந்த நேர்த்தியான தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள முதல் படம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு போய் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்த்து ரசிப்பார்கள்.

ரஜினிக்கு வாழ்த்து

ரஜினிக்கு வாழ்த்து

இப்படி ஒரு அசாதாரண டிஜிட்டல் அனுபவத்தைத் தந்துள்ள என் இனிய நண்பர் ரஜினிகாந்த், இந்தப் படத்தை இயக்கியுள்ள அவர் மகள் சௌந்தர்யா மற்றும் அவர்களின் குழுவினரை வாழ்த்துகிறேன். இந்தப் படத்தை நீங்களும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன். என் நண்பரின் இந்தப் படம் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார்.

ரஜினி படம்

ரஜினி படம்

தமிழில் ரஜினியை வைத்துப் படம் தயாரிப்பீர்களா என்று கேட்டபோது, "நல்ல கதை, ஸ்க்ரிப்ட் அமைந்தால் நிச்சயம் செய்வோம்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X