ரெண்டு ஹீரோயின் இருந்தா தான் நடிப்பேன்.. அடம்பிடிக்கும் அசோக் செல்வன்!

சென்னை : நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன.

Recommended Video

இந்த பக்கம் ஜனனி, இந்த பக்கம் ஐஸ்வர்யா | Ashok கலகல Speech | Vezham *Kollywood | Filmibeat Tamil

சில மாத இடைவெளிகளில் 3 படங்கள் அவரது நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போது அவரது நடிப்பில் வேழம் த்ரில்லர் படம் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் அசோக் செல்வன்

நடிகர் அசோக் செல்வன்

நடிகர் அசோக் செல்வன் தெகிடி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். பல நல்ல படங்களில் நடித்திருந்தாலும் கவனிக்கப்படாத ஹீரோவாகவே இருந்தார். இந்நிலையில் தற்போது வெற்றிப் பட நாயகன் வரிசையில் இடம் பெற்றுள்ளார். அவரது அடுத்தடுத்த படங்கள் சில மாதங்கள் இடைவெளியில் தொடர்ந்து ரிலீசாகி வருகின்றன.

மன்மத லீலை படம்

மன்மத லீலை படம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் இரு மாதங்களுக்கு முன்பு வெளியானது மன்மத லீலை. இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அசோக் செல்வன். இந்தப் படம் குறுகிய காலகட்டத்தில் எடுக்கப்பட்டதாக படக்குழுவினர் கூறியிருந்தனர். ஆனாலும் ரசிகர்களை குறிப்பாக இளம் ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக ஈர்த்தது.

ஹாஸ்டல் படம்

ஹாஸ்டல் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருந்த ஹாஸ்டல் படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் பாய்ஸ் ஹாஸ்டலுக்கு வரும் பிரியா பவானி சங்கர் மற்றும் அவரை வெளியில் கொண்டுவர அசோக் செல்வன் மற்றும் நண்பர்கள் படும் பாடு உள்ளிட்டவை காமெடியுடன் கலந்து கொடுக்கப்பட்டிருந்தது.

வேழம் படம்

வேழம் படம்

இந்நிலையில் தற்போது அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது வேழம் படம். கடந்த 24ம் தேதி இந்தப் படம் வெளியாகியுள்ள நிலையில், படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. சந்தீப் ஷ்யாம் படத்தை இயக்கியுள்ளார்.

பிரமோஷனில் அசோக் செல்வன்

பிரமோஷனில் அசோக் செல்வன்

இந்நிலையில் இந்தப் படம் குறித்து பல்வேறு தகவல்களை சமீபத்திய பேட்டியில் அசோக் செல்வன் பகிர்ந்துள்ளார். தன்னுடைய பல படங்கள் கவனத்தை பெறாமல் போன நிலையில் தற்போது தான் வெற்றிகளை பெற்று வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2 ஹீரோயின் கேட்கும் அசோக் செல்வன்

2 ஹீரோயின் கேட்கும் அசோக் செல்வன்

இதனிடையே அவருடன் பேட்டியில் இடம் பெற்ற ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி அவரை வெகுவாக கலாய்த்தனர். அவர் தற்போதெல்லாம் படம் கமிட்டாகும்போதே 2 ஹீரோயின்கள் கண்டிப்பாக தன்னுடைய படத்தில் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக அவர்கள் கிண்டல் செய்தனர். இந்த எண்ணிக்கை 3, 4 என்று அதிகரித்து வருவதாகவும் கூறினர்.

அசோக் செல்வன் பதில் கமெண்ட்

அசோக் செல்வன் பதில் கமெண்ட்

இதையடுத்து பேசிய அசோக் செல்வன், தான் இதை அக்ரிமெண்டிலேயே பதிவு செய்து விடுவதாக பதிலுக்கு மௌனமாகவே பதில் கொடுத்தார். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதில் சிறப்பான நடிப்பை அசோக் செல்வன் வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X