மேங்கோ ஸ்வீட் பொங்கல் டூ கொள்ளு சட்னி வரை.. அசோக் செல்வன் கல்யாண விருந்து!

சென்னை: அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமண விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் சாப்பாட்டு மெனு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுஹாசினி - மணிரத்னம், அஜித்-ஷாலினி, சினேகா- பிரசன்னா, சூர்யா - ஜோதிகா, மஞ்சிமா மோகன் -கௌதம் கார்த்திக் வரிசையில் இன்று அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் காதல் ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

Ashok selvan and keerthy pandian marriage wedding menu revealed

அருண்பாண்டியனின் மகள்: தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் துள்ளல் நடிப்பு இளமைக்கே உரித்தான மிடுக்கு, என தன் பாந்தமான நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் அருண்பாண்டியன். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான இணைந்த கைகள் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

கீர்த்தி பாண்டியன்: இவரின் மூன்றாவது மகள் தான் கீர்த்தி பாண்டியன். தும்பா படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர், தனது தந்தையுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது.

காதல் மலர்ந்தது: இதையடுத்து கீர்த்தி பாண்டியன் பா.ரஞ்சித் தயாரித்துவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதலித்து வருவதாகவும் கடந்த ஒரு வருட காலமாகவே தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து, இருவீட்டரின் சம்பதத்துடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்து திருமண தேதி அறிவிக்கப்பட்டது.

Ashok selvan and keerthy pandian marriage wedding menu revealed

பண்ணை வீட்டில் திருமணம்: இன்று காலை திருநெல்வேலியில் அருண்பாண்டினின் பண்ணை வீட்டில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமண விருந்து: இந்நிலையில், அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணத்தின் சாப்பாட்டு மெனு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாரம்பரிய முறைப்படியே திருமணம் நடந்ததால்,உணவும் பாரம்பரிய முறைப்படியே பரிமாறப்பட்டது. இதில், மேங்கோ ஸ்வீட் பொங்கல், இருட்டுக்கடை அல்வா இளநீர் புட்டிங், நார்த்தங்காய் பச்சடி, வெண்டைக்காய் பச்சடி, மரவள்ளி கிழங்கு வடை, பருத்திப்பால் பாயாசம், பீட்ரூட் சந்தகை - மாப்பிள்ளை சொதி, பலாகாய் கறி - வாழக்காய் பூரி, இட்லி, நீர் தோசை, ராகி அடை, திணை பொங்கல், கதம்ப சாம்பார், தேங்காய் சட்னி, நெல்லிக்காய் சட்னி, கொள்ளு சட்னி, புளி மிளகாய், கிடரங்காய் தொக்கு என வகை வகையாக உணவு பறிமாறப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X