அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண வரவேற்பு புகைப்படம்.. இத்தனை பிரபலங்கள் வந்தாங்களா?
சென்னை: நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில்,திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இயக்குநரும், நடிகருமான அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா என்கிற திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். இதைத்தொடர்ந்து அன்பிற்கினியால் என்கிற படத்தில் அப்பா அருண்பாண்டியனுடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

காதல் மலர்ந்தது: நடிகை கீர்த்தி பாண்டியன் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெக் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்த போது தான் கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் காதல் மலர்ந்தது.

காதல் திருமணம்: இதையடுத்து, இருவரும் தங்களது காதலை முறைப்படி பெற்றோரிடம் சொல்ல பெற்றோரின் சம்மதத்துடன் செப்டம்பர் 13ந் தேதி, அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
பசுமை விருந்து: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண விருந்தில் எப்படி பலாப்பழ பிரியாணி பேசப்பட்டதோ, அதே போல இவர்களில் திருமணத்தில் பசுமை விருந்து பரிமாறப்பட்டது. இதில் மரவள்ளி கிழங்கு வடை, பருத்திப்பால் பாயாசத்தை பற்றி பேசிவந்தனர்.

பேரழகியுடன் நான்: இதையடுத்து, அசோக் செல்வன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு, உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான் என்கிற கேப்ஷனும் கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

திருமண வரவேற்பு: இந்நிலையில், அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில்,நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ஒன்றாக வந்து மணமக்களை வாழ்த்தினர். மேலும், நடிகர்கள் சாந்தனு, ஹரீஷ் கல்யாண், ஆர்யா, கலையரசன் நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி, மஞ்சிமா மோகன் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











