பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் அசோக் செல்வன் புதிய படம் நிறைவு.. யாரு ஹீரோயின் தெரியுமா?

சென்னை: அசோக் செல்வன் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகி வரும் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இந்தப் புதிய பிரம்மாண்டப் படத்தை, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

அசோக் செல்வனின் திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார். கதைக்களத்தின் தேவைக்கேற்ப, பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Ashok Selvan and Nimisha Sajayan new movie shoot wrapped
Photo Credit:

'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பாக இது அமைந்துள்ளது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சித்தா', 'கனா' போன்ற படங்களில் ஹிட் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, 'டியூட்', 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற வெற்றிப் படங்களின் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Ashok Selvan and Nimisha Sajayan new movie shoot wrapped
Photo Credit:

தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குநர் மகேந்திரன், பாடலாசிரியர் மோகன் ராஜன், தேசிய விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் பட்டணம் ரஷீத், ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார் (சவுண்ட் வைப் ஸ்டுடியோஸ்) மற்றும் நடன இயக்குநர் அசார் ஆகியோர் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் தலைப்பு, முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் மேலும் பல முக்கிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய ரொமாண்டிக் த்ரில்லர் படத்திற்கான ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X