twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன பிரியா பவானி சங்கர் இப்படி இறங்கிட்டாங்க.. ஆபாச வசனங்கள் நிறைந்த ஹாஸ்டல் டீசர் ரிலீஸ்!

    |

    சென்னை: அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள ஹாஸ்டல் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே பரத் உடன் பிரியா பவானி சங்கர் நடித்த டைம் என்ன பாஸ் வெப்சீரிஸில் நடிகர் அசோக் செல்வன் நட்புக்காக நடித்திருந்த நிலையில், தற்போது இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

    டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார்.

    வணக்கம் சென்னையில் கலக்கிய சிவா -பிரியா ஆனந்த் ஜோடி... மீண்டும் இணையும் காசேதான் கடவுளடா ரீமேக் வணக்கம் சென்னையில் கலக்கிய சிவா -பிரியா ஆனந்த் ஜோடி... மீண்டும் இணையும் காசேதான் கடவுளடா ரீமேக்

    நடிப்புக்குத் தீனி

    நடிப்புக்குத் தீனி

    தமிழ் சினிமா, மலையாள சினிமா என ரவுண்டு கட்டி நடித்து கலக்கி வருகிறார் நடிகர் அசோக் செல்வன். ஓ மை கடவுளே படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து நடிப்புக்குத் தீனி போடும் தீனி படத்திலும் நல்ல நடிப்பையும் அசோக் செல்வன் வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளினார்.

    பிபிஎஸ் ஜோடி

    பிபிஎஸ் ஜோடி

    பிரியா பவானி சங்கரும் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். நடிகர் பரத் ஹீரோவாக நடித்திருந்த டைம் டிராவல் வெப்சீரிஸான டைம் என்ன பாஸில் பரத்துக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். அதே வெப்சீரிஸில் நட்புக்காக வந்து சென்ற அசோக் செல்வனுடன் தற்போது ஜோடி சேர்ந்துள்ளார்.

    பாய்ஸ் ஹாஸ்டல்

    பாய்ஸ் ஹாஸ்டல்

    ஹாஸ்டல் எனும் தலைப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். நாசர், முண்டாசுப்பட்டி ராமதாஸ், சதீஷ், KPY யோகி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பாய்ஸ் ஹாஸ்டலை சுற்றிப் பார்க்க வேண்டும் என பிரியா பவானி சங்கர் ஆசைப்படும் காட்சியில் டீசர் ஆரம்பமாகிறது.

    ஆபாச வசனங்கள்

    ஆபாச வசனங்கள்

    எதிர்நீச்சல் படத்தில் பயன்படுத்தப்பட்ட பெயர், மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி சொல்லும் வான்கோழி முட்டை கதையில் எல்லாம் வந்த ஆபாச வார்த்தைகளை தாராளமாக இந்த படத்தில் எடுத்து பயன்படுத்தி உள்ளனர். டீசரின் இறுதியில் அந்த பாட்டி பேசும் டபுள் மீனிங் வசனமும் முகம் சுளிக்க வைக்கிறது.

    டீசர் ரிலீஸ்

    கூடிய விரைவில் வெளியாக உள்ள ஹாஸ்டல் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அசோக் செல்வனுக்கும், பிரியா பவானி சங்கருக்கும் நடிப்புக்கு பெரிய அளவில் இந்த படம் தீனி போட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். நல்ல என்டர்டெயினராக வெளியானால் சரி.

    English summary
    Ashok Selvan and Priya Bhavani Shankar starring fun riding movie Hostel teaser released now. Nasser, Sathish, Mundasupatti Ramadoss and some other talented actors staring in this comedy flick.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X