Por Thozhil Box Office: நல்ல படம் எப்பவுமே ஜெயிக்கும்.. போர் தொழில் முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: பல நூறு கோடி செலவு செய்து ஹாலிவுட்டிலேயே தோர் ரக்னோரக் போன்ற படங்கள் வெளியாகி வரும் நிலையில், சில கோடிகளில் லவ் டுடே, டாடா, போர் தொழில் போன்ற நல்ல படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து வருகின்றன.

விஜய், அஜித் நடித்த வாரிசு, துணிவு படங்கள் இந்த ஆண்டு விமர்சன ரீதியாக வெற்றிப் பெறாத நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் தமிழ் சினிமாவின் மானத்தை காத்து வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

Ashok Selvan and Sarath Kumars Por Thozhil Day 1 Box Office reports are here

அசோக் செல்வன் படத்துக்கு தியேட்டரில் ஆள் வர மாட்டாங்க என்கிற நிலை காலையில் இருந்த நிலையில், இரவு காட்சிக்கு கூட்டம் அலை மோதியது இயக்குநர் விக்ரம் ராஜா, அசோக் செல்வன் மற்றும் சரத்குமாரின் சின்சியரான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்த ராட்சசன்: ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த ராட்சசன் படம் எப்படி குறைவான பட்ஜெட்டில் தரமாக உருவாக்கப்பட்டதோ அதே போல வெளியாகி உள்ள த்ரில்லர் படம் தான் போர் தொழில். பெண்களை குறிவைத்து கொலை செய்யும் சீரியல் கில்லரை அனுபவம் வாய்ந்த சரத்குமார் மற்றும் அனுபவம் இல்லாத கோல்டு மெடலிஸ்ட் அசோக் செல்வன் இணைந்து எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பது தான் கதை.

திரைக்கதை, மேக்கிங் என கடைசி வரை படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு சென்றிருப்பது தான் இந்த படத்தின் வெற்றி.

ப்ளூ சட்டை மாறன் பாராட்டு: வழக்கமாக கமர்ஷியல் படங்கள் வந்தாலே கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன் நல்ல படங்கள் வந்தால் பாராட்டவும் தவறவில்லை. இந்த ஆண்டு வெளியான டாடா உள்ளிட்ட ஒரு சில படங்களை பாராட்டிய ப்ளூ சட்டை மாறன் இந்த வாரம் வெளியான போர் தொழில் படத்தையும் பாராட்டி உள்ளார்.

ப்ளு சட்டை மாறன் விமர்சனத்திற்கு பிறகும் போர் தொழில் படத்திற்கு ஒட்டுமொத்த மீடியாக்கள் கொடுத்த ஆதரவு மற்றும் விமர்சனங்கள் காரணமாகவும் முதல் காட்சி ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்றால் கூட இரவு காட்சிக்கு கூட்டம் அலைமோதியது தான் படத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

முதல் நாள் வசூல்: அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் என பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாத இந்த படத்திற்கு முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் வெறும் 50 லட்சம் மட்டும் தான் என்றும் ஒட்டுமொத்தமாக 1.5 கோடி வரை படம் வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ashok Selvan and Sarath Kumars Por Thozhil Day 1 Box Office reports are here

ஆனால், இரவு படம் பிக்கப் ஆகி உள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிறுகளில் நல்ல வசூல் வரும் என்பது உறுதியாகி உள்ளது. ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அசோக் செல்வனுக்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக இந்த போர் தொழில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல படங்களை ரசிகர்கள் எப்போதுமே கை விடமாட்டார்கள் என்பதற்கு உதாரணமாக இந்த போர் தொழில் படத்தின் பாக்ஸ் ஆபிஸும் மாறுமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X