Ashok Selvan: "இந்த கேள்விலாம் ரொம்ப ரொம்ப தப்பு?" லேடி ஆங்கரை வெளுத்து வாங்கிய அசோக் செல்வன்!

சென்னை: சூது கவ்வும் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அசோக் செல்வன்.

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது கேரியரை தொடங்கிய அசோக் செல்வன், தற்போது பிஸியான ஹீரோவாக வலம் வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் நடிகை கீர்த்தி பாண்டியனுடன் அசோக் செல்வனுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் தவறான கேள்விக் கேட்ட பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளரை அசோக் செல்வன் வெளுத்து வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

 Ashok Selvan: Ashok Selvan trolled the Female Anchor for talking about beauty

சூடான அசோக் செல்வன்: கோலிவுட்டின் பிஸியான இளம் ஹீரோக்களில் அசோக் செல்வனும் ஒருவர். சூது கவ்வும் படத்தில் கேசவன் என்ற கேரக்டரில் அப்பாவியாக நடித்து சினிமாவில் அறிமுகமான அசோக் செல்வன், அடுத்தடுத்து தெகிடி, ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, நித்தம் ஒரு வானம் போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.

முக்கியமாக சில மாதங்களுக்கு முன்னர் வெளியான போர் தொழில் திரைப்படம், அசோக் செல்வனுக்கு பெரிய கம்பேக் கொடுத்தது. சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் அசோக் செல்வன். இதனிடையே அசோக் செல்வனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.

நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் அசோக் செல்வன். கிராண்டாக நடந்த இத்திருமணத்தில் எடுக்கப்பட்ட க்யூட்டான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இந்நிலையில், அசோக் செல்வனின் சமீபத்திய பேட்டியும் டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பிரபலமான யூடியூப் சேனலுக்காக அசோக் செல்வனின் பேட்டிக் கொடுத்துள்ளார்.

அதில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர், அசோக் செல்வனின் அழகு அவருக்கு ப்ளஸ்ஸா அல்லது மைனஸா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, இப்போதெல்லாம் பக்கத்து வீட்டு பசங்க மாதிரி இருக்கும் தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களை தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்துள்ளது. உங்களைப் போன்ற Fare-ஆன ஹீரோக்களுக்கு அழகு ப்ளஸ்ஸா அல்லது மைனஸ்ஸா எனக் கேட்டுள்ளார்.

இதனால் டென்ஷனான புதுமாப்பிள்ளை அசோக் செல்வன், "இந்த கேள்வியே தப்பானது, நீங்கள் எதனை அழகு என சொல்றீங்க. விஜய் சேதுபதியும் தனுஷும் அழகில்லையா" என அதிரடி காட்டினார். அதற்கு பதிலளித்த பெண் தொகுப்பாளர், "இப்போது உள்ள பெண்கள் அழகைப் பார்த்து தான் ஆண்களை சைட் அடிக்கிறார்கள்" எனக் கூறினார். அதற்கும் மறுப்புத் தெரிவித்த அசோக் செல்வன், "இது தவறான புரிதல், அடிப்படையில் இந்தக் கேள்வியே தவறானது. வெள்ளையாக இருந்தால் அழகு, கருப்பென்றால் அசிங்கம் என பார்ப்பது ஆங்கிலேயர்களின் மனநிலை" என வெளுத்து வாங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X