Ashok Selvan: எமக்குத் தொழில் ரொமான்ஸ்க்கு எமனாக வந்த மழை.. என்னங்க இப்படி ஆகிப்போச்சு!

சென்னை: அசோக் செல்வன், அவந்திகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எனக்குத் தொழில் ரொமான்ஸ். இந்தப் படம் வரும் நவம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இப்படியான நிலையில் கனமழை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

எமக்குத் தொழில் ரொமான்ஸ் என படத்தின் பெயர் அறிவிக்கும்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் அசோக் செல்வன், அவந்திகா, பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தினை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். இவர் திருமலை படத்தினை தயாரித்துள்ளார்.

ashok selvan emakku thozhil romance kanguva

படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. ஆனால் அந்த இசை வெளியீட்டு விழாவுக்கு அசோக் செல்வன் வரவில்லை. இதனால் படத்தின் தயாரிப்பாளர் திருமலை தொடங்கி, பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட பலரும் அசோக் செல்வனை மிகவும் மோசமாக விமர்சித்தனர். குறிப்பாக ஜே. ராஜன் பேசுகையில், அசோக் செல்வன் அவருடைய அம்மாவிற்கு கார் வாங்கிக் கொடுத்தது குறித்தும் மிகவும் மோசமாக பேசினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

ashok selvan emakku thozhil romance kanguva

ரிலீஸ் தேதி: இந்நிலையில் படத்தின் எந்த புரோமோசனும் பெரிதாக இல்லாமல், படத்தினை வரும் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. இப்படியான நிலையில் தமிழ் நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தை வெள்ளிக்கிழமை அதாவது நவம்பர் 15ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தோம். தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக இன்னும் ஒருவாரம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் திரைப்படத்தை வெளியிட்டால் வசூலில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் இப்படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை நின்றதும் விரைவில் படம் வெளியிடப்படும். படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ashok selvan emakku thozhil romance kanguva

கங்குவா: மேலும் அதே தினத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியின் ஃபீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு மழை காரணமாக ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் மழை மட்டும் இல்லாமல், படத்திற்கு பெரும் சவாலான விஷயங்களாக இருப்பது, நடிகர் சூர்யாவின் கங்குவா படம் நாளை அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதும் பெரும் சவாலை அளிக்கும் என படக்குழு நினைப்பதாகவும் கூறப்படுகின்றது. குறிப்பாக அசோக் செல்வன் இந்தப் படத்தின் புரோமோசன் பணிகளில் கலந்து கொள்ளாதது பெரும் அதிருப்தியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X