தெலுங்கிலும் கலக்க ரெடி.. அசோக் செல்வனின் அடுத்த மூவ் !
சென்னை : வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் அசோக் செல்வன் தெலுங்கு திரையுலகில் கால்பதிக்க உள்ள தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.
அசோக் செல்வன் சூது கவ்வும் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகர். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார். சூது கவ்வும் படத்தில் நடித்த பிறகு இவர் ஹீரோவாக நடித்த படம் பீட்சா 2 இப்படம் சுமார் ஆகவே இருந்தது.

தனது அடுத்த படமான தெகிடியில் வித்தியாசமாக நடித்தார் பலரது கவனத்தை ஈர்த்தார். இதன் பின் ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி போன்ற படங்களில் நடித்து வந்த இவர். மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் கூட்டத்தில் ஒருத்தன் படம் தான்.

இவர் தற்போது ஓ மை கடவுளே படத்தில் நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கி வந்த இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இவர் அடுத்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார் என்று ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது. அனி சசி இயக்கும் ஒரு படத்தில் செஃப் ஆக நடிக்கிறார் அதில் அவருடன் நித்யா மேனன் மற்றும் ரித்து வர்மா நடிக்கின்றனர்.

இப்படி பட்ட ஒரு கதை தெலுங்கு சினிமாவில் பார்த்தது கிடையாது என்றே பலரும் கூறுகின்றனர். இது போல அசோக் செல்வன் வித்தியாசமான கதையை தேர்வு செய்து படத்தின் வெற்றிக்கு உதவும் என்று பலரால் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











