எனக்கு கொரோனா வந்த டைம்லதான் கிஸ் சீன்கள் எடுக்கப்பட்டது... அசோக் செல்வன் கலகல!

சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மன்மத லீலை. இந்தப் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சென்னையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

மன்மத லீலை படம்

மன்மத லீலை படம்

நடிகர் அசோக் செல்வன் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மன்மத லீலை. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு. மாநாடு படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவுள்ள மன்மத லீலை படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அதிரடியான முத்தக்காட்சிகள்

அதிரடியான முத்தக்காட்சிகள்

படத்தின் கிளிம்சில் வெறும் முத்தக்காட்சியை மட்டுமே காட்சிப்படுத்தி அதிரடி கிளப்பியிருந்தார் வெங்கட்பிரபு. இதனிடையே நேற்றைய தினம் வெளியாகியுள்ள ட்ரெயிலரும் இளம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் தயாரித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

திருமணத்திற்கு பிறகு ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் லீலைகளை கூறும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில், சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

வெங்கட்பிரபுவுடன் இணைந்தது வரம்

வெங்கட்பிரபுவுடன் இணைந்தது வரம்

இதில் வெங்கட் பிரபு, அசோக் செல்வன், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அசோக் செல்வன், தான் கல்லூரி படித்த காலத்தில் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தை பார்த்ததாகவும் தற்போது அவருடன் இணைந்து வேலை செய்தது வரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பில் முத்தக்காட்சிகள்

கொரோனா பாதிப்பில் முத்தக்காட்சிகள்

கொரோனா காலத்தில் பரிசோதனை முயற்சியாக இந்தப் படத்தை எடுக்கலாம் என்று வெங்கட் பிரபு தெரிவித்ததாகவும் தனதுக்கு இடையில் கொரோனா வந்து போன நேரத்தில் எடுத்ததுதான் படத்தின் முத்தக் காட்சிகள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் அதனால் ஹீரோயின்கள் யாரும் பாதிப்படையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மிகமிக நல்ல படம்

மிகமிக நல்ல படம்

இந்தப் படத்தை ஏன் செய்தீர்கள் என்று அனைவரும் கேட்டதாகவும், ஆனால் இந்தப் படத்தில் எந்த கெட்ட விஷயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தன்னை ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் இந்தப் படம் மிக மிக நல்லப் படம் என்றும் அவர் மேலும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X