Ashok Selvan Marriage: ஆடி முடிந்து ஆவணியில் அசோக் செல்வன் திருமணம்.. மணமகள் அந்த பிரபலத்தின் மகளா?
சென்னை: போர் தொழில் படம் ஹிட்டான யோகம் நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணத்துக்கு பெரிய இடத்துப் பெண் கிடைத்து விட்டதாக ஹாட் தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளது.
33 வயதாகும் நடிகர் அசோக் செல்வன் சாக்லேட் பாயாக தொடங்கி த்ரில்லர் ஹீரோவாக மாறியுள்ள நிலையில், திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம்.

இது காதல் திருமணமா அல்லது பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கப் போகும் திருமணமா? என்பது குறித்த தகவல்கள் எல்லாம் சீக்கிரமே வெளியாகும் என தெரிகிறது.
அசோக் செல்வனுக்கு திருமணம்: சூது கவ்வும் படத்தில் விஜய்சேதுபதி உடன் இணைந்து சின்னதாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அசோக் செல்வன். பீட்ஸா 2, தெகிடி படங்களில் ஹீரோவாக மாறிய அசோக் செல்வன் ஓ மை கடவுளே, தீனி, போர் தொழில் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு ஏற்ற மாதிரியான நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், விரைவில் அசோக் செல்வனுக்கு திருமணம் ஆகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அருண் பாண்டியன் மகள்: தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகர் அருண் பாண்டியனின் மகளைத் தான் அசோக் செல்வன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சில மாதங்களே தகவல்கள் புகைந்து வரும் நிலையில், அது கிட்டத்தட்ட உறுதி தான் என்றும் ஆடி மாதம் முடிந்து ஆவணியில் திருமணம் ஆக உள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசோக் செல்வன் தரப்பு வெளியிடும் என தெரிகிறது.
மூன்று மகள்கள்: நடிகர் அருண் பாண்டியன் விஜயா என்பவரை திருமணம் செய்த நிலையில், அவருக்கு கவிதா பாண்டியன், கிரணா பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என மூன்று மகள்கள் உள்ளனர். இதில், ஏற்கனவே கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியனுக்குத் திருமணம் ஆன நிலையில், கீர்த்தி பாண்டியனைத் தான் அசோக் செல்வன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அன்பிற்கினியாள் ஹீரோயின்: மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கான அன்பிற்கினியாள் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி பாண்டியனைத் தான் அசோக் செல்வன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறுகின்றனர். அன்பிற்கினியாள், தும்பா படங்களில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் கண்ணகி எனும் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அறிவிப்பு: நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசோக் செல்வன் அல்லது கீர்த்தி பாண்டியனே வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











