ரீமேக் ஆகும் மலையாள படம்.. அசோக் செல்வன் ஜோடியானார் நடிகை பிரியா பவானி சங்கர்!

By

சென்னை: மலையாளத்தில் இருந்து ரீமேக் ஆகும் படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்கிறார், பிரியா பவானி சங்கர்.

கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடர் மூலம் நடிகையானவர் பிரியா பவானி சங்கர்.

அதற்கு முன், டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இதில் கவனிக்கப்பட்டதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு. எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் மாஃபியா படத்தில் நடித்தார்.

ஓ மணப்பெண்ணே

ஓ மணப்பெண்ணே

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதா மோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வரும் பிரியா பவானிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். அதர்வாவுடன் குருதி ஆட்டம், ஜீவாவுடன் களத்தில் சந்திப்போம், ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ஓ மணப்பெண்ணே, ஆந்தாலஜி படமான கசடதபற உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

அசோக் செல்வன்

அசோக் செல்வன்

இந்நிலையில் அசோக் செல்வன் ஜோடியாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் சதுரம் 2 என்ற படத்தை இயக்கி இருக்கிறார். நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உட்பட பலர் நடிக்கின்றனர்.

Recommended Video

விரைவில் தமிழ் படம் பண்ணுவேன் | DIRECTOR G. ASHOK CHAT PART-02 | FILMIBEAT TAMIL
கபியாரே கூட்டாமனி

கபியாரே கூட்டாமனி

பிரவீன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு போபோ சசி இசை அமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் , மலையாளத்தில் ஜான் வர்கீஸ் இயக்கத்தில், தியான் ஶ்ரீனிவாசன், நமீதா புரமோத் நடித்த அடி கபியாரே கூட்டாமனி என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X