காமெடியில் கலக்கும் அசோக் செல்வன்... ஹாஸ்டல் படத்திலும் காமெடி கலாட்டா

சென்னை : நடிகர் அசோக் செல்வன் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மன்மத லீலை படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. எளிமையான கதைக்களமாக இருந்தாலும் ரசிகர்களை கட்டிப் போட்டது. அடுத்ததாக வரும் 28ம் தேதி பிரியா பவானி சங்கருடன் அவர் இணைந்துள்ள ஹாஸ்டல் படம் ரிலீசாக உள்ளது.

சிறப்பான நடிகர்

சிறப்பான நடிகர்

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் அசோக் செல்வன். நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அவருடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து பீட்சா 2, தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை சிறப்பான நடிகராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இறுதியாக ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் அசோக் செல்வன். இந்தப் படங்கள் அவரது கேரியரில் சிறப்பாக அமைந்துள்ளன. ஓ மை கடவுளே படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் மன்மத லீலை படமும் சிறப்பான அனுபவத்தை கொடுத்தது.

மன்மத லீலை படத்தில் அசோக் செல்வன்

மன்மத லீலை படத்தில் அசோக் செல்வன்

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மத லீலை படத்தில் திருமணத்திற்கு பிந்தைய காதலில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். படத்தின் கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. படமும் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது.

மலையாள ரீமேக் ஹாஸ்டல்

மலையாள ரீமேக் ஹாஸ்டல்

இதையடுத்து நித்தம் ஒரு வானம் மற்றும் ஆகாசம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் அசோக் செல்வன். இந்த இரு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகின்றன. இந்த இரு படங்களுக்கும் சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனிடையே மலையாளத்தில் கப்பயர கூட்டமணி படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ளது ஹாஸ்டல்.

28ம் தேதி ரிலீஸ்

28ம் தேதி ரிலீஸ்

படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் பிரியா பவானி சங்கர் அசோக் செல்வனுக்கு ஜோடியாகியுள்ளார். படத்தில் சதீஷ், நாசர், முனீஷ்காந்த் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் படத்தை தயாரித்துள்ளனர்.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

போபோ ஷிஷி படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் கலகலப்பான வகையில் இந்த ட்ரெயிலர் காணப்படுகிறது. ஒரு ஹாஸ்டலில் நடக்கும் கலகலப்பான சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதை இந்த ட்ரெயிலர் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

காமெடியில் இணைந்த பிரியா

காமெடியில் இணைந்த பிரியா

அசோக் செல்வனின் காமெடியுடன் பிரியா பவானி சங்கரின் காமெடியும் படத்தில் இணைந்து காணப்படுகிறது. போதாததற்கு நாசரின் காமெடி கலாட்டாக்களும் படத்தில் சேர்ந்துள்ளது. படத்தின் ட்ரெயிலரே ரசிகர்களை கவரும் வகையில் காணப்படுகிறது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

தொடர் காமெடி கலாட்டா

தொடர் காமெடி கலாட்டா

முந்தைய படங்களில், காதல், சீரியஸ் என பன்முகங்களை காட்டிய அசோக் செல்வன், கடந்த மன்மத லீலை படத்தில் காமெடியில் கலக்கினார். இந்நிலையில் ஹாஸ்டல் படத்திலும் அவர் காமெடி கலாட்டா செய்யவுள்ளார். ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வகையில் ஹாஸ்டல் படம் கண்டிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X