இதுக்காகத்தான் நடிகர் விஜய் சேதுபதியை கடவுள் ஆக்கினோம்... விளக்குகிறார் ஓ மை கடவுளே அசோக் செல்வன்
சென்னை: 'ஓ மை கடவுளே' படத்தில் விஜய் சேதுபதியை, ஏன் கடவுள் ஆக்கினோம் என்று நடிகர் அசோக் செல்வன் விளக்கம் அளித்தார்.
அசோக் செல்வன், ரித்திகா சிங் ஜோடியாக நடித்துள்ள படம், ஓ மை கடவுளே. வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷா ரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

அக்சஸ் பிலிம் பேக்டரி
அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, லியான் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். சக்தி பிலிம் ஃபேக்டரி படத்தை வெளியிடுகிறது. வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகிறது.

யூடியூப்பில் சாதனை
இதன் டிரைலரை நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். இதன் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது வெளியான டிரைலரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்திலே அதிகப் பார்வைகளை கடந்து யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.

சூது கவ்வும்
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடிக்கிறார். அவரை கடவுளாக நடிக்க வைத்தது ஏன் என்று படத்தின் ஹீரோ அசோக் செல்வனிடம் கேட்டோம். அப்போது அவர் கூறும்போது, விஜய் சேதுபதி, என் நண்பர். சூது கவ்வும் படத்தில் இருந்தே நண்பர்களாகப் பழகி வருகிறோம். நான் நன்றாக வர வேண்டும் என்று நினைப்பவர்களில் அவரும் ஒருவர்.

ரமேஷ் திலக்
இந்தப் படத்தில் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் உடனே சம்மதித்தார். கடவுள் கேரக்டரில் அவரை ஏன் நடிக்க வைத்தீர்கள் என்று கேட்கிறார்கள். அவர் சொன்னால் மற்றவர்கள் கேட்பார்கள். அப்படி ஒரு இமேஜ் அவருக்கு இருக்கிறது. அதனால் அவரை நடிக்க வைத்தோம். அவருடன் ரமேஷ் திலக்கும் நடித்துள்ளார்.

ரித்திகா சிங்
'இறுதிச்சுற்று' படத்தில் ரித்திகா சிங் நடிப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதனால் அவரை இதில் நடிக்க வைத்துள்ளோம். அவரது கேரக்டர் சிறப்பாக இருக்கும். இது ரொமான்டிக் காமெடி படம். வாணிபோஜன் யாரும் நடிக்காத கேரக்டரில் நடித்திருக்கிறார். இயக்குனர் கவுதம் மேனன் இயக்குனராகவே படத்தில் வருகிறார். கண்டிப்பாக இந்தப் படம் வெறொரு அனுபவத்தை தரும் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











