ஹைதராபாத் : அசோக் செல்வன் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் திரைப்படமே ஓடிடியில் வெளியாகிறது.
ஓ மை கடவுளே தமிழில் மாபெரும் வெற்றிபெற தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு படப்பிடிப்பு சமீப நாட்களாக நடைபெற்று வர இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த அசோக் செல்வன் முதல்முறையாக தெலுங்கில் நடிக்க படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியுடன் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்ற அறிவிப்பையும் படக்குழு அறிவித்துள்ளது.

உயர்ந்த இடத்தை எட்டி
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் காமெடி கலந்த கேங்ஸ்டர் திரைப்படமாக வெளியான சூது கவ்வும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி இருக்க இதில் விஜய் சேதுபதியின் குழுவில் ஒரு நபராக அசோக்செல்வன் நடித்து அறிமுகமாகி இருப்பார். சூது கவ்வும் திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இப்பொழுது தனித்தனியாக உயர்ந்த இடத்தை எட்டி இருக்க அசோக் செல்வன் இப்பொழுது இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகராக உள்ளார்.

தெகிடி
பீட்சா தொடர்ந்து பீட்சா பாகம் 2 உடனடியாக தயாராக அதில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அசோக் செல்வன் அடுத்தடுத்த திரைப்படங்களால் நம்பிக்கைக்குரிய இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். குறிப்பாக
தெகிடி திரைப்படம் இவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது என்று சொல்லலாம் அந்த அளவிற்கு பெரிய ஹிட்டடித்தது.

ஓ மை கடவுளே
தெகிடி திரைப்படத்திற்கு பிறகு அசோக் நடித்த அனைத்து திரைப்படங்களும் தோல்வியையும் சுமாரான வெற்றியையும் மட்டுமே கண்டு வர அறிமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான ஓ மை கடவுளே சிறந்த படமாக திரையில் பல நாட்கள் ஓடி வசூலை வாரி குவித்தது.

அஸ்வந்த் இயக்குகிறார்
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் காதலர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த ஓ மை கடவுளே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இப்பொழுது இந்தியிலும் உருவாக இருப்பதாக இயக்குனர் அஸ்வந்த் ஓரிரு நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தியிருக்க இந்தியிலும் அஸ்வந்த் இயக்குகிறார்.

ஜிஃபிளக்ஸ் ஓடிடியில்
இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த அசோக் செல்வன் தெலுங்கில் நின்னிலா நின்னிலா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதில் நித்யா மேனன் மற்றும் ரிது வர்மா என இரண்டு கதாநாயகிகள் நடிக்க அப்படம் தமிழில் தீனி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்ற தகவலை கூறியதோடு இந்தப் படம் ஜிஃபிளக்ஸ் ஓடிடியில் தளத்தில் வெளியாகிறது என்ற தகவலையும் படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











