ஓ மை கடவுளே கொடுத்த நம்பிக்கை.. அசோக் செல்வன் அடுத்து இந்த இயக்குநருடன் இணைகிறார்!
சென்னை: அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், அடுத்ததாக அசோக் செல்வன் என்ன படம் பண்ண போறாரு, இயக்குநர் யார் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
தெகிடி இயக்குநர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் தான் அசோக் செல்வன் அடுத்ததாக நடிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

சூது கவ்வும்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் தான் நடிகர் அசோக் செல்வனும் அறிமுகமானார். அதே 2013ம் ஆண்டில், பீட்ஸா 2 படத்தில் நாயகனாகவும் அசோக் செல்வன் நடித்திருந்தார்.

ஹிட்
பீட்ஸா 2 திரைப்படம் அசோக் செல்வனுக்கு தமிழ் சினிமாவில் வெற்றிப் படமாக அமையவில்லை. ஆனால், 2014ம் ஆண்டு வெளியான தெகிடி படம் தான் அசோக் செல்வனை தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அந்த படத்தில் நாயகியாக ஜனனி அய்யர் நடித்திருந்தார். விண்மீன் விதையில் பாடல் சூப்பர் ஹிட் அடித்தது.

ஓ மை கடவுளே
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், நீண்ட நாட்களுக்குப் பிறகு அசோக் செல்வனுக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருந்தார். வாணி போஜன், சாரா, விஜய்சேதுபதி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர்.

மீண்டும்
ஓ மை கடவுளே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து எந்த இயக்குநர் படத்தில் அசோக் செல்வன் நடிக்கப் போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், தனக்கு முதல் வெற்றியை கொடுத்த தெகிடி இயக்குநர் ரமேஷ் இயக்கத்தில் நடிக்க அசோக் செல்வன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தெகிடி 2?
தெகிடி படம் சரியான த்ரில்லர் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தது. இந்நிலையில், மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி தெகிடி 2 படத்தை உருவாக்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், தெகிடி 2 இல்லை என்றும், இது புது கதை, நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும் என்றும் இயக்குநர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ஆட்டி படைத்து வரும் நிலையில், இந்த பிரச்சனை சரியாகி நார்மல் நிலைக்கு வந்த பிறகு, அசோக் செல்வனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. மேலும், இயக்குநர் ரமேஷ், அசோக் செல்வனின் கதையை இறுதி செய்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











