என் மருமகள் அனைத்திலும் அழகு.. கீர்த்தி பாண்டியனை புகழ்ந்த அசோக் செல்வனின் அம்மா!

சென்னை: நடிகை கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து எழுந்த விமர்சனத்திற்கு, நிறம் என்பது முக்கியம் இல்ல, அவ மனசு ரொம்ப அழகானது என நடிகர் அசோக் செல்வன் தாயார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

இயக்குநரும், நடிகருமான அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா என்கிற படத்தில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். இதைத்தொடர்ந்து அன்பிற்கினியாள் என்கிற படத்தில் அப்பா அருண்பாண்டியனுடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. கீர்த்தி பாண்டியனின் நடிப்பில் கடந்த ஆண்டு கண்ணகி,ப்ளு ஸ்டார்திரைப்படம் வெளியானது.

keerthi pandian ashok selvan

காதல் மலர்ந்த கதை: நடிகை கீர்த்தி பாண்டியன் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த புளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்தார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்தில், அசோக் செல்வன், சாந்தனு நடித்திருந்தனர். இப்படத்தில்,கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

keerthi pandian ashok selvan

கடந்த ஆண்டு திருமணம்: இதையடுத்து, இருவரும் தங்களது காதலை முறைப்படி பெற்றோரிடம் சொல்லி பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பெரும் பணக்காரரான அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் இவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அழகான பெண்: இதையடுத்து இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியானதும், அசோக் செல்வனிற்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா என்றும், கீர்த்தி பாண்டியனின் நிறம் மற்றும் அவரது தோற்றம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பேட்டி ஒன்றில் புதில் அளித்த அசோக் செல்வன், உலகத்திலேயே எனக்கு நொம்ப அழகான பெண் கீர்த்தி தான் என்று பதில் அளித்துள்ளார்.

keerthi pandian ashok selvan

அனைத்திலும் அழகு: கடந்த செப்டம்பர் மாதம் இவர்கள் முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில்,அசோக் செல்வனின் அம்மா,கீர்த்தி பாண்டியன் பற்றி பேசி உள்ளார். அதில், திருமண போட்டோ வெளியானதும்,என் மருமகள் பற்றி நிறைய நெடிகவ் கமெண்ட்ஸ் வரும் போதெல்லாம் எப்படி இப்படி எல்லாம் பேசுறாங்கன்னு நினைப்பேன். நிறம் என்பது முக்கியம் இல்ல, அவ மனசு ரொம்ப அழகானது. அவ உயரத்திற்கு ஏற்ற மாதிரி உடம்பை மெயின்டெயின் பண்ணி வச்சி இருக்கா. அதை செய்ய நிறைய பேரால் முடியாது. இதனால், அந்த மாதிரி ஒரு நினைப்பு கூட எங்களுக்கு வந்தது கிடையாது. அவ எல்லா விஷயத்திலும் அழகி தான் என அசோக் செல்வனின் அம்மா மலர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X