மாயநதி படத்திற்காக உண்மையான ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றிய ஹீரோ
சென்னை : நடிகர் அபிசரவணன் முக்கிய நாயகனாக நடித்திருக்கும் படம் தான் மாயநிதி இந்த படம் வரும் ஜனவரி 31 வெளியாகிறது. படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார் அசோக் தியாகராஜன் .படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் வெண்பா ,அப்புக்குட்டி,இளவரசு மற்றும் ஹரீஸ் உத்தமன் நடித்துள்ளனர் .
நடிகர் அபிசரவணன் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ,இவர் அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.அதற்கு பிறகு குட்டி புலி படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் .இதன் பின் முன்னனி கதாபாத்திரத்தில் கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் நடித்தார் .இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை .அதற்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து இயக்கிய டூரிங் டாக்கீஸ் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .

இதன் பின் பிரசாந்தின் சாகசம் படத்திலும் நடித்து இருந்தார் .இதற்கு பிறகு இவர் நாயகனாக நடித்த பட்டதாரி படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .இப்படி சரியான வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் அபிசரவணனுக்கு முக்கியமான படம் தான் இந்த மாயநதி படம் .


இதற்கு பிறகு படப்பிடிப்பு மாயவரம் பகுதிகளில் நடைபெற இருந்ததால், மாயவரம் சுற்றிய இடங்களில் 15 நாட்களுக்கு மேல் ஆட்டோ ஓட்டினாராம் அபிசரவணன் .இப்படி ஆட்டோ ஓட்டும் போது அவரே கிட்டதட்ட ஒருநாளில் 1000ரூபாய் வரை சம்பாரித்ததாக கூறினார் .மேலும் பல மக்களின் உணர்வுகள் பற்றியும் வாழ்கை முறை பற்றியும் தெரிந்து கொண்டதாக சமீபத்திய பேட்டியில் கூறினார்.


Click it and Unblock the Notifications











