'நீங்களும் நானும்.. வாழ்வின் அர்த்தம்' திருமண நாளை கவிதையாகக் கொண்டாடிய பிரபல வில்லனும் நடிகையும்!
சென்னை: தங்களது திருமண நாளை கொண்டாடிய பிரபல வில்லன் நடிகருக்கும் அவர் மனைவிக்கும் நடிகர், நடிகைகள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகர் அஷூதோஷ் ராணா. வில்லத்தனத்தை பார்வையாலேயே காட்டிவிடும் இவர், பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியில் சிம்பா, வார், மிலன் டாக்கீஸ், டர்ட்டி பாலிடிக்ஸ் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

சங்கத்தமிழன்
தமிழில், லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் நடித்த வேட்டை, மகிழ் திருமேனி இயக்கிய மீகாமன், கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்த தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், ராகவா லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா, விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

ரேணுகா சஹானே
இந்தி, தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்துவரும் ரேணுகா சஹானேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 'ஹன்சல் மேத்தாவின் ஜயதி என்ற படத்தில் இருவரும் நடித்தபோது காதல் ஏற்பட்டது. இருவருக்கும் ஈர்ப்பு இருந்ததால், திருமணம் செய்துகொண்டோம்' என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ரேணுகா.

திருமண நாள்
இருவரும் நடித்த அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் வசித்து வரும் இவர்களுக்கு சவுரியமான் ராணா, சத்யேந்திர ராணா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள், நேற்று தங்களது 19 வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

அழகான உலகம்
திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை ரேணுகா சஹானே, 'நீங்களும் நானும்..என்ன ஓர் அழகான உலகம்.. 19 வருடத்துக்கு முன்பு இதே நாளில்.. எல்லையின்றி தொடரும் காதல்' என்று அதில் கவிதையாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
Recommended Video

காதல் கோரிக்கை
இதை ரீட்விட் செய்துள்ள அஷூதோஷ் ராணா, 'நீ, என் காதல் கோரிக்கை, நீ, என் வாழ்க்கையின் அர்த்தம், நீ என் ஆத்மார்த்த உணர்வு, அந்த உணர்வின் நீட்டிப்பும் நீதான். என்றென்றும் உனக்காகவே இருக்கிறேன். என் இதயத்தில் இருந்து நன்றி என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை ஊர்மிளா மடோன்கர் உட்பட பல நடிகர், நடிகைகள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











