குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ள லோனர் ஆல்பம் பாடல் ரிலீஸானது.. ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை : சமீபகாலமாக சமூக வலை தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளவர் நடிகர் அஸ்வின் குமார்.

ஓகே கண்மணி, ஆதித்ய வர்மா என சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இப்பொழுது மிகப் பிரபலம் அடைந்துள்ளார்.

அடுத்தடுத்த திரைப் படங்களில் ஒப்பந்தமாகி வரும் அஸ்வின் தற்போது நடித்துள்ள லோனர் ஆல்பம்பாடல் வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது.

ஃபேவரிட் நிகழ்ச்சியானது

ஃபேவரிட் நிகழ்ச்சியானது

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது . இதில் புகழ், மணிமேகலை, அஸ்வின், சரத், பாபா பாஸ்கர்,தங்கதுரை, சகிலா, பவித்ரா லட்சுமி, கனிமொழி, தர்ஷா குப்தா என பலர் பங்கேற்றிருந்தனர். குக் மற்றும் கோமாளிகளாக நடைபெற்ற இந்த சமையல் நிகழ்ச்சி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களின் ஃபேவரிட் நிகழ்ச்சியானது.

பெண் ரசிகைகள்

பெண் ரசிகைகள்

பல குறும்படங்கள், திரைப்படங்கள், சீரியல்கள் என நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருந்த அஸ்வின் இதில் மிகச் சிறப்பாக விளையாடி அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தார் குறிப்பாக பெண் ரசிகைகள் இவருக்கு ஏராளமாக உருவாகினர்.

இதன் காரணமாக அஸ்வினுக்கு எக்கச்சக்கமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கு அவருடன் இணைந்து விஜய் டிவி புகழ் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு கவுரவம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்பட்டு கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

யூட்யூபில் வெளியாகி உள்ளது

யூட்யூபில் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் அஸ்வின் சில ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான குட்டி பட்டாசு அனைவரையும் ரசிக்க வைத்து இணையதளத்தில் இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. அதைத் தொடர்ந்து தற்பொழுது "லோனர்" என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். ஏடிவை கிருஷ் இயக்கியுள்ள இந்த பாடல் தற்பொழுது யூட்யூபில் வெளியாகி உள்ளது. குட்டி பட்டாசை தொடர்ந்துள்ளனர் லோனர் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X