twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடும்பத் தலைவிகளிடையே சீரியல்கள் ஏற்படுத்திய தாக்கம் நல்லதா? கெட்டதா?... அலசும் அஷ்வின்

    |

    சென்னை : குடும்பத் தலைவிகளிடையே சீரியல்கள் ஏற்படுத்திய தாக்கம் நல்லாதா? கெட்டதா? என்பது குறித்து அலசி ஆராய்கிறார் இளம் எழுத்தாளர் அஷ்வின்.

    குடும்ப உறவுகளோடு பின்னிப்பிணைந்த கதையை இல்லத்தரசிகள் பெரிதும் கொண்டாடுவதற்கு என்ன காரணம்.

    வீச்சருவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டும் ஜெய்… சிவ சிவா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!வீச்சருவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டும் ஜெய்… சிவ சிவா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

    இது குறித்து, அஷ்வின் தனது யூடியூப் சேனலான டேக் 1 டேக்2 டேக்3 யில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    சவாலானது

    சவாலானது

    ஒரு திரைப்படத்திற்கு கதை எழுதுவது என்பதே மிகப்பெரிய சவாலான ஒன்று. இரண்டரை மணி நேரத்தில் முடியும் கதையை, ஹீரோயின், ஹீரோ, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தகுந்தபடி கதை எழுத வேண்டும். மேலும் படத்திற்கு திரைக்கதை அமைப்பது என்பது மிகவும் சவால் மிகுந்த ஒன்று, அதை இன்றைக்கு இருக்கும் இயக்குனர்கள் இயல்பாக நிகழ்த்தி காட்டி வருகின்றனர்.

    சின்னத்திரை பெரும் சவால்

    சின்னத்திரை கூடுதலான பல சவாலை சந்தித்து வருகிறது. இரண்டரை மணி நேரத்தில் முடியும் படத்திலேயே பல மெனக்கெடல்களை சந்திக்க வேண்டிய நிலையில், 5 அல்லது 6 வருடம் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குவது என்பது அத்தனை எளிதான செயல் அல்ல.

    சீரியலில் சுவாரசியம்

    சீரியலில் சுவாரசியம்

    மாமியார், மருமகள் சண்டை, கணவன் மனைவி பிரச்சினை, குடும்ப உறவுகள் என இயல்பான கதைகளாக இருந்தாலும், கதைகளுக்குள் சுவாரசியத்தைக் கூட்டி, அதில் பல ட்விஸ்ட்களை வைத்து பிரம்மிக்க வைக்கின்றனர். இதனால் இல்லத்தரசிகள் இதை பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.

    மகிழ்ச்சிக்குரியது

    மகிழ்ச்சிக்குரியது

    தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு திரைப்படம் வெளியானது என்றால், அந்த திரைப்படம் குறித்து, விமர்சனம் சிறந்தாக இருக்கும் போதே, அந்த திரைப்படம் வெற்றிப்பெறுகின்றன. ஆனால், தற்போது திரையரங்கா, ஓடிடியா என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால் , சீரியலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைப்பது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக உள்ளது என்றார் அஷ்வின்.

    குடும்பத் தலைவிகள் கொண்டாடும் சீரியல்

    குடும்பத் தலைவிகள் கொண்டாடும் சீரியல்

    வெள்ளித்திரைக்கு இணையாக தற்போது சின்னத்திரையும் வளர்ந்து வருவதற்கு இல்லத்தரசிகள் ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றனர். எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் அதை விட்டு விட்டு சீரியலில் ஆலாபித்து விடுகின்றனர். இல்லத்தரசிகள் மட்டும் விரும்பி பார்த்த மெகா தொடர்களை, வேலைக்கு செல்லும் பெண்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை ராதிகா சரத்குமார் அவர்களையே சேரும். குடும்ப உறவை சுவாரசியமாக்கி சித்தி என்ற தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார் ராதிகா. தற்போது வாணி ராணி சீரியல் மறு ஒளிபரப்பாகி வருகிறது. இதையும் ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர்.

    குடும்ப உறவுகளைப்போல

    குடும்ப உறவுகளைப்போல

    மக்களிடம் வரவேற்பை பெற்றத் தொடராக இருந்தாலும் சரி, புதிதாக ஒளிபரப்பாகும் சீரியலாக இருந்தாலும் சரி அதற்கு வரவேற்புகள் இருந்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், சீரியலில் வரும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் அவர்களின் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களைப் போலவே நினைத்து ரசித்து பார்க்கின்றனர் என்பது தான் உண்மை, அதனால் தான் சீரியலை மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்று இளம் எழுத்தாளர் அஷ்வின் கூறினார்.

    English summary
    young writer ashwin analyzes why housewives celebrate serials,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X