அஸ்வினின் மனம் கவர்ந்த வாத்தி கம்மிங்...இணையத்தை கலக்கும் மற்றொரு வைரல் வீடியோ

சென்னை : வாத்தி கம்மிங் பாடலுக்கு தான் தீவிர ரசிகராக மாறி விட்டதை கிரிக்கெட் வீரர் அஸ்வின் மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஆல் ரவுண்டரான அஸ்வின் இங்கிலாந்திற்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதுடன், சதமும் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 Ashwin, Hardik Pandya and Kuldeep Yadavs Vaathi dance video viral

இந்த போட்டியின் 4 வது நாளில் 5 விக்கெட்களை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாட வாத்தி கம்மிங் பாடலுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது மீண்டும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் அஸ்வின் பகிர்ந்துள்ளார். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த முறை சக வீரர்களாக ஹார்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் உடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின் நடனமாடி உள்ளார்.

சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் அடித்ததை கொண்டாடுவதற்காக அவரது மனைவி ப்ரீத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் போஸ்டரை போட்டோஷாப் செய்து, அதில் விஜய்க்கு பதில் அஸ்வின் படத்துடன் கூடிய போஸ்டரை பகிர்ந்திருந்தார்.

தற்போது சக வீரர்களுடன் அஸ்வின், வாத்தி கம்மிங் படலுக்கு ஆடிய வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். ஏறக்குறைய 8000 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X