twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்லவேளை தடுப்பூசி போட்டேன்… இல்லைனா விபரீதமாகி இருக்கும்.. கொரோனாவிலிருந்து மீண்ட அஸ்வின் ககுமனு !

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் குணசித்திர வேடத்திலும் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் அஸ்வின் ககுமனு.

    இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

    முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பெரிய விபரீதத்தில் இருந்து தப்பித்ததாக கூறியுள்ளார்.

    அறிமுகம்

    அறிமுகம்

    நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் அஸ்வின் ககுமனு. ஆனால் அந்த திரைப்படம் இவருக்கு பெயரை பெற்றுத் தரும் திரைப்படமாக அமையவில்லை. இதையடுத்து, மங்காத்தா திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் அனைவருக்கும் தெரிந்த முகமானார்.

    பாதிக்கப்பட்டேன்

    பாதிக்கப்பட்டேன்

    இவர் கடந்த மாதம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டதாகவும் அப்போது குடும்பத்தினர் எதிர்கொண்ட கஷ்டங்களையும் அவர் கூறியுள்ளார். நான் ஏப்ரல் 3 ஆம் தேதி கொரோனா தடுப்பூசியின் போட்டுக்கொண்டேன். இரண்டாவது தடுப்பூசி போடுவதற்குள் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். CT ஸ்கேனில் நுரையீரலில லேசான தொற்று இருந்ததால், 4 நாள் தீவிர கண்காணிப்பில் இருந்தேன். நான் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் என் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் என்று கூறினார்.

    மிகவும் பயந்தேன்

    மிகவும் பயந்தேன்

    மேலும் என்னையும் என் குழந்தையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என் மனைவியின் தோளில் விழுந்தது. என் மகளும் 3 நாள் காய்ச்சலில் இருந்தாள், என் மனைவிக்கும் வாசனை தெரியவில்லை. முதல் இரண்டு நாட்கள் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். என் குழந்தைக்கும் என் மனைவிக்கும் விபரீதமாக எதாவது நடந்து விடுமோ என்று பயந்தேன்.

    தடுப்பூசி போடுங்கள்

    தடுப்பூசி போடுங்கள்

    நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது, சிறிது அலட்சியமாக இருந்தால் உறவுகைள இழந்துவிடுவோம். நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி போடுவது, முகமூடி அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க சிறந்த வழி தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அஸ்வின் ககுமனு கூறியுள்ளார்.

    Read more about: ashwin kakumanu
    English summary
    Ashwin kakumanu scary Experience of covid 19
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X