நாங்களும் தெறிக்க விடுவோம்...பட்டையை கிளப்பும் அஸ்வினின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். கோவையை சேர்ந்த அஸ்வின் தற்போது இளம் பெண்கள் பலரின் கனவு நாயகனாக மாறி உள்ளார்.
அதிலும் குட்டி பட்டாஸ் வீடியோ பாடல் வெளியீட்டிற்கு பிறகு இளைஞர்கள் பலரின் மனம் கவர்ந்த ஹீரோ ஆகி விட்டார் அஸ்வின். அடுத்தடுத்து பல வீடியோ பாடல்களில் நடித்து வரும் அஸ்வின், தனது ரசிகர்களுக்காக அடிக்கடி ஸ்டெயிலாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

டிரெண்டிங் ஆன ஃபோட்டோஸ்
லேட்டஸ்டாக அஸ்வின் நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள், அவர் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங் ஆகி விட்டது. அந்த ஃபோட்டோக்களுக்கு 7 லட்சத்தை தாண்டி லைக்குகள் குவிந்து வருகிறது.

உங்களை மிஸ் பண்றோம்
கமெண்ட்களும் குவிந்து வருகிறது. கமெண்டில் ஹார்ட், முத்தங்கள் போன்ற எமேஜிகள் தான் அதிகமாக பதிவிடப்பட்டு வருகின்றன. அதில் ஒரு ரசிகர், அஸ்வின் உங்களை நாங்கள் எவ்வளவு மிஸ் செய்கிறோம் என உங்களுக்கு தெரியாது என பதிவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் பின்தொடர்வோர்
மற்றொருவர், தொடர்ந்து ஃபோட்டோக்களை பதிவிடுங்கள். நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ரசிகர்களால் அஸ்வினை சமூக வலைதளங்களில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தெறிக்கும் குட்டி பட்டாஸ்
அஸ்வின் கடைசியாக நடித்த லோனர் ஆல்பமும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலின் லிரிகல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இவர் நடித்த குட்டி பட்டாஸ் பாடல் இதுவரை 65 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











