அஸ்வின் நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் …. ரொமான்டிக் டிரைலர் ரிலீஸ் !
சென்னை : குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின், சின்னத்திரை ரசிகைகளின் சாக்லெட் பாய்யாக வலம் வந்தார்.
அந்த நிகழ்ச்சியில் சிவாங்கியுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகள் ரசிக்கும்படி இருந்தது.

அஸ்வின்
அஸ்வின் தற்போது ஹரிஹரன் இயக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். குக்-வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்,

வரவேற்பை பெற்றது
விவேக் மெர்வின் இசையமைக்க, இப்படத்தை ட்ரெண்ட்ஸ் ஆர்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றது.

ரொமான்டிக் டிரைலர்
இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதில், ஹீரோயினை உருகி உருகி காதலிக்கும் காதலனாக அஸ்வின் நடித்துள்ளார். ரொமான்டிக்காக வெளியாகி உள்ள டிரைலர் வெளியான சிறிது நேரத்திலேயே டிரெண்ங்கில் உள்ளது. அஸ்வின் முதல் முறையாக நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

வைரலான பாடல்
இப்படத்தின் கல்யாண பாடலான உருட்டு பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. அஸ்வினுக்காக அடிபொலி ஆல்பம் பாடலுக்கு முதல் முதலாக குரல் கொடுத்த சிவாங்கி அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படத்திற்கும் தனது தேன் குரலால் பாடி உள்ளார். விவேக் மெர்வின் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை மாதேவன் எழுதி உள்ளார்.


Click it and Unblock the Notifications











