Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. பொன்னியின் செல்வன் முதல் பாடலை வெளியிடப் போகும் விளையாட்டு வீரர்கள்!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை பெரிதாக லைகா நிறுவனம் புரமோட் செய்யவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், வேறலெவல் புரமோஷனை லைகா கையில் எடுத்துள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் நாளை மாலை 6 மணிக்கு தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், விளையாட்டு வீரர்களை வைத்து சோழ வீரர்களின் காவியமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்ய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வெற்றிகரமான 3 வது நாள், 5 வது நாள் என்று விளம்பரம்.. பாக்யராஜ் கிண்டல்!

எக்ஸ்பிரஸ் அவென்யூவில்
சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நாளை மாலை நடைபெறுகிறது. நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.
|
சஞ்சு சாம்சன்
பெரியளவில் புரமோஷன் செய்ய நினைத்த லைகா நிறுவனம் சினிமா பிரபலங்களை தாண்டி தற்போது விளையாட்டு வீரர்களை வைத்து பொன்னியின் செல்வன் முதல் பாடலை வெளியிட மாஸ் பிளான் போட்டுள்ளது. மலையாளத்தில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடலை கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வெளியிட உள்ளார்.
|
ரவிச்சந்தர் அஸ்வின்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான பொன்னி நதி தமிழ்ப் பாடலை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட உள்ளார்.
|
பி.வி. சிந்து
பொன்னி நதி தெலுங்கு பாடலை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து நாளை மாலை 6 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார். இந்தி மற்றும் கன்னட மொழிகளில் எந்த விளையாட்டு வீரர்கள் வெளியிட போகின்றனர் என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் நடக்கும் நேரத்தில் செஸ் சாம்பியன்களை வைத்து வெளியிட்டு இருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விக்ரம் வருவாரா
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள சியான் விக்ரம் டீசர் வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாத சூழலில் மாட்டிக் கொண்டார். அதன் பிறகு கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள முதல் பாடல் வெளியீட்டு விழாவிற்கு சியான் விக்ரம் வருவாரா? மாட்டாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அதிகபட்சமாக வரமாட்டார் என்கிற தகவல்களே வெளியாகி உள்ளன.