Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கோல்டன் குளோப் வென்ற அமெரிக்க வாழ் தமிழர்!
Recommended Video
வாஷிங்டன் : ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக மிக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
அதில் சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட தொலைக்காட்சி தொடர் பிரிவில் 'The Master Of None' தொடரில் நடித்த அஸிஸ் இஸ்மாயில் அன்சாரி என்பவருக்கு சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது.
ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
75-வது கோல்டன் குளோப்
அமெரிக்காவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் கோல்டன் குளோப் எனும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 75-வது கோல்டன் குளோப் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர் ஒருவருக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.
அஸீஸ் இஸ்மாயில் அன்சாரி
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற 75-வது கோல்டன் குளோப் விருதுகளில் நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கான பிரிவில் சிறந்த நடிகர் விருது அஸீஸ் இஸ்மாயில் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர்
2015-ல் இருந்து ஒளிபரப்பாகிவரும் 'The Master Of None' என்னும் தொலைக்காட்சித் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் அன்சாரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களிலும் சில கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு
அஸீஸ் இஸ்மாயில் அன்சாரியின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆனால், அஸீஸ் பிறந்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில்தான். 34 வயதாகும் அஸீஸ் அன்சாரிக்கு தமிழ் மொழியும் தெரியுமாம்.