அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா?... பிறந்தநாள் புகைப்படங்களை பார்த்து ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்!

நடிகை அசின் தனது மகள் அரினின் பிறந்தநாளை தண்ணீர் விமரிசையாக கொண்டாடியிருக்கிறார்.

சென்னை: நடிகை அசின் தனது மகளின் பிறந்தநாளை புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அசின். கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் அவர்.

Asin celebrates daughter’s birthday party with aquatic theme

தமிழில் இருந்து இந்திக்கு போன அசின், அமீர் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் உள்ளிட்டோருடன் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

2016ம் ஆண்டு தொழிலதிபர் ராகுலை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். அவருக்கு அரின் என்ற 2 வயது மகள் இருக்கிறார்.

அரினின் இரண்டாவது பிறந்தநாள் புகைப்படங்களை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மகளின் பிறந்தநாளை தண்ணீர் தீமில் அசின் கொண்டாடியிருக்கிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற இடம் முழுவதும் நீர் வாழ் உயிரினங்களின் உருவங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மகள் அரினின் உடைக்கூட நீல நிறத்தில் தான் இருக்கிறது.

ஒரு புகைப்படத்தில் நீல நிற பிராக்கில் அரின் இருக்கிறார். அவருக்கு அருகில் டால்பின் பொம்பைகள் துள்ளி குதித்துக்கொண்டிருக்கின்றன. பிறந்தநாள் கேக் கூட கடல் வாழ் உயிரினங்களின் உருவங்களை கொண்டு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு புகைப்படத்தில் அசினின் கணவர் ராகுல், அரினை தூக்கி வைத்துக்கொண்டு நிற்கிறார். பின்புறம் இருந்து எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், அப்பாவும், மகளும் பிறந்தநாள் கேக்கை வேடிக்கை பார்த்தப்படி நிற்கின்றனர்.

அசினின் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு, அரினுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கின்றனர். குறிப்பாக நடிகைகள் ரவீனா உள்ளிட்டோர் அரினை வாழ்த்தியுள்ளனர். சில ரசிகர்கள் "அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா?" என ஆச்சரியப்பட்டுள்ளனர்.

More from Filmibeat

Read more about: asin அசின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X